UPDATED : நவ 29, 2009 12:00 AM
ADDED : நவ 29, 2009 10:20 AM
இந்நிகழ்ச்சியை சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து வழங்கியது. காலை பத்தாம் வகுப்பு, மதியம் பிளஸ் 2 வகுப்பினருக்கு பொது தேர்வை எதிர்கொள்ளும் விதம் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
ஆசிரியர்கள் அளித்த அறிவுரைகள்:
பத்தாம் வகுப்பு: ஆங்கிலம் ஏ.மேரி ரத்தினபாய்(அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, மேலூர்):
ஆங்கிலத்தை கடினமாக கருத கூடாது. புரிந்து படிக்க வேண்டும். கேள்வித்தாள் அமைப்பை நன்கு அறிந்திருக்க வேண்டும். தேர்வில் அடித்தல், திருத்தல் இன்றி எழுத வேண்டும். செய்யுள், கடிதம் போன்ற கேள்விகளுக்கு முழுமையாக பதிலளித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.
கணிதம் - டி.அப்துல் ரகுமான்(அல்-அமீன் உயர்நிலை பள்ளி, மேலூர்):
மற்ற பாடங்களை விட கணிதத்தில் எளிதில் நூறு மதிப்பெண் பெற வாய்ப்புகள் ஏராளம். அடிக்கடி செய்து பார்க்க வேண்டும். ஜியாமெட்ரி, கிராப் போன்ற அதிக மதிப்பெண் கேள்விகளுக்கு முதலில் பதிலளிக்க வேண்டும். வட்ட நாற்கரம், தொடுகோடு பாடங்களை படிக்க வேண்டும்.
அறிவியல் - டி.ஜெயா டெய்சி(அரசு மேல்நிலை பள்ளி, தனியாமங்கலம்):
மண்புழு, மாசு கட்டுப்பாடு, நெல் சாகுபடி போன்ற பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்க வாய்ப்புகள் உண்டு. பண்புகள், வேறுபாடுகள், அலகுகள், சமன்பாடுகளை படிக்கும் போது குறிப்பெடுத்து வைத்து கொள்ள வேண்டும். புரிந்து படித்தால் நல்லது.
சமூக அறிவியல் - எம்.முத்துராமன்(அரசு மேல்நிலை பள்ளி, தெற்குத்தெரு):
சமூக அறிவியலை கதை போல் படித்தால் பாடங்கள் நினைவில் நிற்கும். பேரரசு கொள்கை, அணி சேரா நாடுகள், திட்டம், ஒத்துழையாமை போன்ற பாடங்களை நன்கு படிக்க வேண்டும்.
பிளஸ் 2: ஆங்கிலம் - ஆர்.பழனிவேல்ராஜன் (சி.இ.ஒ.ஏ., மெட்ரிக் பள்ளி, மதுரை):
புத்தகத்தின் பின்னால் உள்ள இலக்கணங்களை எழுதி பார்க்க வேண்டும். கடிதம், அப்ஜெக்டிவ் போன்றவைகளை நன்கு தெரிந்திருக்க வேண்டும். சில ஆண்டுகளாக நடந்த கேள்வி தாள்களை எழுதி பார்க்க வேண்டும்.
கணிதம் - ஆர்.சந்திரசேகரன் (டி நோபிலி மெட்ரிக் பள்ளி, மதுரை):
முடிந்தளவுக்கு பல முறை முழு மாதிரி தேர்வு எழுதி பார்க்க வேண்டும். அதிக மதிப்பெண் கேள்விகளுக்கு முக்கியத்துவம் அளித்து படிக்க வேண்டும். முதலில் 10, பிறகு 6, கடைசியாக ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். மேலும் 1, 2, 3, 6, 7, 8, 9 பாடங் களை படித்தால் 194 மதிப்பெண் பெறலாம்.
இயற்பியல் - வி.சுப்ரமணியன்(தலைமையாசிரியர், தியாகராஜர் ஆலை மேல்நிலைபள்ளி, கப்பலூர்):
பத்து மதிப்பெண் விடைகளை சுருக்கமாக தேவையான தலைப்புகள் இட்டு முக்கியமாக சுருக்கி எழுத வேண்டும். ஒன்பதாம் பாடத்தை தவறாமல் படிக்க வேண்டும். புத்தகத்தின் பின்பகுதி கேள்விகளில் 18 ஒரு மதிப்பெண் கேள்விகள் கேட்க வாய்ப்புகள் உள்ளன. கடந்த ஐந்தாண்டு கேள்வி தாள்களை படிக்க தவறக் கூடாது.
வேதியியல் - இ.சீனிவாசன்(அரசு மேல்நிலை பள்ளி, சமயநல்லூர்):
மின்வேதியியல், பயன்பாடு சேர்மங்கள் பாடங்களில் கவனம் செலுத்த வேண்டும். கரிம, கனிம வேதியியல் கேள்விகளை அடிக்கடி எழுதி பார்க்க வேண்டும். இயற்வேதியியல் கணக்குகளை எழுதிப்பார்க்க வேண்டும்.
உயிரியல் - எம்.சந்திரசேகரன் (சைசை சா.துரைசாமி மெட்ரிக்குலேஷன் மேல்நிலை பள்ளி, மேலூர்):
தாவரவியலில் 1, 2, 4, 5 ஆகிய நான்கு பாடங்களில் ஏதாவது 2 பாடங்களை மட்டும் முழுவதுமாக படித்தால் 50 சதவீத மதிப்பெண் பெறலாம். விலங்கியலில் 1, 5, 6 பாடங்களில் இரண்டை முழுமையாக படிக்க வேண்டும். அதிலுள்ள பத்து மதிப்பெண் கேள்விகளை எழுதி பார்த்தால் 50 சதவீத மதிப்பெண் பெறலாம். இவ்வாறு பேசினர்.
மாணவர்களுக்கு ஜெயித்துக் காட்டுவோம், உடம்பும் மனசும் நல்லா இருக்கணும் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை அழகர்கோவில் லதா மாதவன் கல்வி நிறுவனங்கள், ஒமேகா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், குரு சோழா ஆவின் பாலகம், மீனா லேப் நிறுவனங்களும் இணைந்து வழங்கின.
