தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மெட்ரிக் மாணவர்களுக்கு அலட்சியம் : எச்சரிக்கிறார் ஆங்கில ஆசிரியை

மெட்ரிக் மாணவர்களுக்கு அலட்சியம் : எச்சரிக்கிறார் ஆங்கில ஆசிரியை

மெட்ரிக் மாணவர்களுக்கு அலட்சியம் : எச்சரிக்கிறார் ஆங்கில ஆசிரியை


UPDATED : நவ 29, 2009 12:00 AM

ADDED : நவ 29, 2009 10:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2009 12:00 AM ADDED : நவ 29, 2009 10:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அவர் பேசியதாவது: பத்தாம் வகுப்பு மெட்ரிக் படிக்கும் மாணவர்கள், ஆங்கிலப்பாடத்தை சர்வசாதரணமாக அலட்சியப்போக்கு காட்டி  படிக்காமல் விட்டு விடுகின்றனர். இதனால் குறைவான மதிப்பெண்களை பெற வேண்டிய நிலையில் உள்ளனர்.

ஆங்கிலத்தில் மொத்தம் 32 பாடங்கள் உள்ளன.  பாடம் எழுதிய ஆசிரியரை தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். இப்பாடங்களின் கட்டுரைகளையும் படித்து வைக்க வேண்டும். புத்தகத்திலுள்ள ஆங்கில வார்தைகளை மட்டுமே பயன் படுத்த வேண்டும். மற்ற வார்த்தைகளை பயன் படுத்தக்கூடாது. இ.ஆர்.சி.,(எக்ஸ்பிளைன் டு தி ரெபரன்ஸ் கான்டக்ஸ்ட்) எழுதும் போது ஞாபகப்படுத்தி தெளிவாக எழுதுவது அவசியம்.

எஸ்ஸே எழுதும் போது தேவையில்லாத வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. நான்கு பிரிவுகளாக பிரித்து எழுத வேண்டும். பொயட்ரி பிரிவில் பன்ச்சுவேசன்களை சரியாக குறிப்பிட்டு எழுதுவது கட்டாயம். நன்கு கிராமர் படித்தால், 23 மதிப்பெண்களை எளிதாக எடுக்கலாம். அதில் டிக்ரீஸ் ஆப் கம்பேரிசன்,  ஆக்டிவ்வாய்ஸ், பேசிவ்வாய்ஸ்,  டேரக்ட், இன்டேரக்ட், டென்ஸ் பார்ம் ஆகியவற்றை எழுதுவதற்கு, நாம் வீட்டிலும் பள்ளியிலும் நன்கு பயிற்சி பெற்றிருந்தால் மட்டுமே முடியும்.

அதற்கு உங்களை நீங்களே தயார் படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு பயிற்சி அவசியம். அதற்கு கிராமரிலுள்ள 5 அடிப்படை விஷயங்களை தெரிந்து கொண்டால் எளிதாக நாம் மேற்கண்ட கேள்விகளுக்கு பதிலளிக்கலாம். என்னதான் கிராமர், புரோஸ், பொயட்ரி என்று எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருந்தாலும், சரியான முறையில் கையெழுத்து இல்லாமல் இருப்பதாலும் மதிப்பெண் கிடைக்காமல் போய் விடுகிறது.

அதனால் கையெழுத்தை சரியாக எழுத வேண்டும்.இன்னும் சில மாணவர்கள், நம் மெட்ரிக் பிரிவு தானே என்று  ஆங்கிலப்பாடத்தை சர்வ சாதாரணமாக அலட்சியப்போக்கு காட்டி  படிக்காமல் விட்டு விடுகின்றனர். இதனால் குறைவான மதிப்பெண்களை பெற வேண்டிய நிலை ஏற்படுகிறது. இவ்வாறு ஆசிரியை ஷோபா பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us