தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மலாய் மொழிக்கு சமமாக தமிழ் கற்பிக்கிறோம்: சிங்கப்பூர் தமிழாசிரியர்

மலாய் மொழிக்கு சமமாக தமிழ் கற்பிக்கிறோம்: சிங்கப்பூர் தமிழாசிரியர்

மலாய் மொழிக்கு சமமாக தமிழ் கற்பிக்கிறோம்: சிங்கப்பூர் தமிழாசிரியர்


UPDATED : நவ 29, 2009 12:00 AM

ADDED : நவ 29, 2009 11:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2009 12:00 AM ADDED : நவ 29, 2009 11:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம் தெய்வானையம்மாள் மகளிர் கல்லூரியில் நடந்த கற்றல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், சிங்கப்பூர் கல்வி அமைச்சகம் சார் தமிழாசிரியர்கள் குழுத் தலைவர் தமிழரசி பேசியதாவது:

இங்கு, 10ம் வகுப்பு வரை உயர் நிலைப்பள்ளி என்று கூறுவது போல், சிங்கப்பூரில் ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரையில் உயர்நிலைப்பள்ளி என்கின்றனர். தமிழ் மொழி இங்கு பயிற்று மொழியாகவும், அதிகார மொழியாகவும் உள்ளது. ஆனால், மேலை நாடுகளில் இரண்டாவது மொழியாக தமிழ் கருதப்படுகிறது.

சீனா, மலாய் மொழியைப் போல் சம அந்தஸ்தில் பள்ளிகளில் தமிழ் மொழி கற்றுத் தரப்படுகிறது. தமிழ் மொழி அறிவை விரிவுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே நாங்கள் வந்த நோக்கம். இங்கு கற்பிக்கப்படும் முறை, அறிந்து கொள்ளும் முறைகளை தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.

நாங்கள் இங்கு கற்பித்தல் முறைகளை அனுபவபூர்வமாக அறிந்து கொண்டு, இது போன்று சிங்கப்பூரில் மாணவர்களுக்கு தமிழை கற்றுக் கொடுக்க விரும்புகிறோம். இங்குள்ள பண்பாட்டு, கலசார முறைகளை இன்றும், நாளையும் தெரிந்து கொள்வோம். மேலை நாடுகளில் தமிழ் இளங்கலை பட்டப் படிப்பு இல்லை. இதனால், அங்கிருந்து தமிழகத்திற்கு வந்து தமிழ் இளங்கலை பட்டப் படிப்பு கற்க வேண்டியுள்ளது. தமிழ்க் கல்வி மேன்மேலும் வளர, விரிவுரையாளர்கள் அதற்கான பணிகளில் முழுமையாக ஈடுபட வேண்டும். இவ்வாறு தமிழரசி பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us