தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தன்னம்பிக்கை தணிகாசலம்

தன்னம்பிக்கை தணிகாசலம்

தன்னம்பிக்கை தணிகாசலம்


UPDATED : நவ 30, 2009 12:00 AM

ADDED : நவ 30, 2009 09:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 30, 2009 12:00 AM ADDED : நவ 30, 2009 09:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விபரமறிந்தவர்களும் இவரை இப்படித்தான் அழைக்கிறார்கள். எம்.காம். பட்டதாரியான இவருக்கு வேலை கிடைக்கவில்லை. ஏன் நமக்கு இந்த நிலை என்று சிந்தித்தார். இளமையில் திட்டமிடல் இல்லாமல், எந்த துறையை தேர்வு செய்வது என்ற குழப்பமே இதற்கு காரணம் என்பதை உணர்ந்தார்.

தன்னை முழுமையாக அறிய சுயமுன்னேற்றம் படிப்பில் டிப்ளமோ பெற்றார். தான் கற்றதை மற்ற இளைஞர்களுக்கும் கற்றுத்தர முடிவு செய்தார். தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம் குறித்து இலவச பயிற்சி அளிக்கிறார். மாணவர்களின் சந்தேகங்களுக்கு எளிய கதைகள் மூலம் தீர்வு சொல்கிறார்.

பல மாணவர்களிடம் சுயசிந்தனை, சமயோசித புத்தி இல்லை. பிரச்னைகளில் இருந்து வெளி வருவது, திறமையை பயன்படுத்துவது குறித்து தெரியவில்லை. இதை மாணவர்கள் முழுமையாக அறிய வேண்டும். வெற்றியை தூண்டும் மனவலிமையை விளையாட்டு கொடுக்கிறது. மாணவர்கள் படிப்போடு நில்லாமல், விளையாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கையின் வெற்றிக்கு தேர்வு தான் திருப்புமுனை. இதை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வாழ்க்கை மூலம் எடுத்து கூறி தன்னம்பிகையை ஊட்டிவருகிறேன்&' என்று கூறும் தணிகாசலத்திடம் தன்னம்பிக்கை "டானிக்&' பெற "93806 77442&'க்கு தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us