அரசுப் பணி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க மையம் திறப்பு
அரசுப் பணி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க மையம் திறப்பு
UPDATED : டிச 01, 2009 12:00 AM
ADDED : டிச 01, 2009 12:21 PM
அ நிறம் | அளவு
இந்திய ஆட்சிப்பணித் தேர்வுகள், வனப்பணித் தேர்வுகள், பொறியியல் பணித் தேர்வுகள், பொருளாதாரப் பணித் தேர்வுகள், முப்படை பாதுகாப்புப் பணித் தேர்வுகள் (சி.டி.எஸ்.,) தேசியப் பாதுகாப்புக் கல்லூரி தேர்வுகள்(என்.டி.ஏ.,) முப் படையின் உதவி கமாண்டண்ட் மற்றும் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 மற்றும் 2 ஆகிய எல்லா தேர்வுகளுக்கும் பயிற்சியளிக்கும் மையம் சென்னை ஊரப்பாக்கத்தில் திறக்கப் பட்டுள்ளது.
சங்கம் ஐ.ஏ.எஸ்., கல்வியகம் என்ற இந்த மையத்தில், இந்த வாரம் முதல் பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன. சென்னை சைதாப்பேட்டையில் இயங்கும் மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., இலவசப் பயிற்சி மையத்தில் வகுப்பெடுக்கும் பயிற்றுனர்களைக் கொண்டே இம்மையம் நடக்க உள்ளது.
இங்கு இந்திய ஆட்சிப்பணித் தேர்வுகள், இந்திய வனப்பணித் தேர்வு கள், இந்திய பொறியியல் பணித் தேர்வுகள், இந்தியப் பொருளாதாரப் பணித் தேர்வுகள், முப்படைப் பாதுகாப்புப் பணித் தேர்வுகள் (சி.டி.எஸ்.,) தேசியப் பாதுகாப்புக் கல்லூரி தேர்வுகள் (என்.டி.ஏ.,) முப்படையின் உதவி கம்மாண்டண்ட் மற்றும் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 மற்றும் 2 ஆகிய தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது போன்ற அனைத்து தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கும் மையம் தமிழகத்திலேயே இது ஒன்றுதான்.
இம்மையத்தில் இந்த வாரத்தில், வகுப்புகள் துவங்க உள்ளன. பயிற்சி பெறும் மாணவர்கள், முதல் நிலையில் தேர்ச்சி பெற்றால், அவர்கள் செலுத்திய கட்டணம் மனிநேய அறக் கட்டையால் முழுமையும் திருப்பித் தரப்படுவதுடன், தொடர்ந்து முதன்மைத் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்கு முற்றிலும் இலவசமாக வழிகாட்டப்படும்.
பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், விண்ணப்பங்களை இயக்குனர், சங்கம் ஐ.ஏ.எஸ்., கல்வியகம், 3 சி, ரயில்வே கேட் ரோடு, சங்கர வித்யாலயா பள்ளிக்கு எதிரில், கிளாம்பாக்கம் கிராமம், ஊரப் பாக்கம்-603 210 என்ற முகவரிக்கோ அல்லது இணையதளத்திலோ விண்ணப்பிக்கலாம்.
