செமஸ்டர் தேர்வு எழுத அனுமதி கோரி மாணவி மனு தாக்கல்
செமஸ்டர் தேர்வு எழுத அனுமதி கோரி மாணவி மனு தாக்கல்
UPDATED : டிச 01, 2009 12:00 AM
ADDED : டிச 01, 2009 01:06 PM
அ நிறம் | அளவு
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தாக்கல் செய்த மனு: சென்னையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறேன். காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தேன். கல்லூரி முதல்வரிடம் அனுமதி பெற்று, நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தேன்.
கடைசியில் எனக்கு கேன்சர் இருப்பது தெரியவந்தது. அதற்கு சிகிச்சை பெற கல்லூரி முதல்வரிடம் அனுமதி பெற்றேன். கடந்த ஏப்ரல் மாதம் முதல் சிகிச்சை பெற்றேன். கடந்த மாதம் 26ம் தேதி தான் கல்லூரிக்கு வந்தேன். வகுப்பில் கலந்து கொள்ள முதல்வரும் அனுமதி அளித்தார். நான் வகுப்பில் கலந்து கொள்ளாததற்கு நியாயமான காரணம் உள்ளது. நான் எடுத்த சிகிச்சைக்கு ஆதாரங்கள் உள்ளது.
இந்நிலையில்
, செமஸ்டர் தேர்வு வருகிறது. இந்த தேர்வை எழுத எனக்கு முதல்வர் அனுமதியளித்திருக்க வேண்டும். ஆனால், குறைவான வருகை இருப்பதாக கூறி, தேர்வு எழுத என்னை அனுமதிக்கவில்லை. தேர்வு எழுத அனுமதிக்குமாறு முதல்வரிடம் மனு கொடுத்தேன். அதை அவர் பரிசீலிக்கவில்லை, வரும் 10ம் தேதி, செமஸ்டர் தேர்வு துவங்குகிறது. தேர்வை எழுத எனக்கு அனுமதி அளிக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.