பள்ளி கட்டணம்: பள்ளி நிர்வாகிகளுக்கு ஆதரவான ஷரத்துகள்
பள்ளி கட்டணம்: பள்ளி நிர்வாகிகளுக்கு ஆதரவான ஷரத்துகள்
UPDATED : டிச 02, 2009 12:00 AM
ADDED : டிச 02, 2009 12:48 PM
இது
பள்ளிகளின் கட்டமைப்பு, அமைவிடம், வளர்ச்சிக்கு தேவைப்படும் நிதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்பது, சமச்சீர் கல்விக் கொள்கைக்கு முரணாக உள்ளது. இது நீக்கப்பட வேண்டும்&' என்று, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வலியுறுத்தியுள்ளது.
இது, தமிழக அரசின் சமச்சீர் கல்விக் கொள்கைக்கு நேர் எதிரானது. தொழில்நுட்பக் கல்லூரிகளில் கூட, கட்டணம் நிர்ணயிக்க இந்த அளவுகோல்கள் கிடையாது. அப்படியிருக்கும்போது, பள்ளிக் கல்வியில் இந்த வகையான பிரிவை கொண்டு வருவது, எந்த வகையிலும் நியாயமில்லை.
நகர்ப்புறங்களில் பள்ளிகள் இருப்பதற்காக கூடுதல் கட்டணம் என்றால், நகர்ப்புறங்களில் உள்ள ஏழைகளின் நிலை என்ன? கட்டமைப்பு கூடுதலாக உள்ளது என்றால், எல்லா பள்ளிகளிலும் சமச்சீரான கட்டமைப்பு இருக்காது என்பதை அரசே ஒப்புக் கொள்கிறது என்று தான் பொருள். தன் முன்னேற்றத்திற்காக ஏற்படுத்திக் கொள்ளும் செலவுகளுக்கு, மாணவர்கள் கட்டணம் தர வேண்டும் என்பது நியாயமில்லை. எதிர்கால வளர்ச்சிக்கு தேவைக்காக, மாணவர்களிடம் இருந்து எப்படி கட்டணம் வசூலிக்க முடியும்?
இந்த ஏற்பாடு, வர்த்தக நிறுவனத்திற்கு மட்டுமே பொருந்தும்; பள்ளிகளுக்கு பொருந் தாது. எனவே, இந்தப் பிரிவை நீக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
