தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திறந்தநிலை பல்கலை தேர்வு 12ம் தேதி துவக்கம்

திறந்தநிலை பல்கலை தேர்வு 12ம் தேதி துவக்கம்

திறந்தநிலை பல்கலை தேர்வு 12ம் தேதி துவக்கம்


UPDATED : டிச 03, 2009 12:00 AM

ADDED : டிச 03, 2009 12:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 03, 2009 12:00 AM ADDED : டிச 03, 2009 12:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இது குறித்து தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:


தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் எம்.பில்., -எம்.பி.ஏ., - பி.ஜி.டி.ஐ.எம்.,- டி.ஐ.எம்., - பி.எட்., - பி.காம்., - பி.எஸ்சி., - பி.டி.எஸ்., - பி.சி.ஏ., - பி.பி.ஏ., - எம். காம்., - எம்.எஸ்சி., - எம்.சி.ஏ., - பி.ஏ., - எம்.ஏ., புரோகிராம்ஸ் மற்றும் சர்டிபிகேட், டிப்ளமோ ஆகியவற்றுக்கான தேர்வுகள் வரும் 12, 13, 19, 20, 26, 27, ஜனவரி 2, 3, 10, 23, 24, 30, 31, பிப்., 6ம் தேதிகளில் நடைபெறுகின்றன.நாட்காட்டி ஆண்டு மாணவர்களுக்குரிய பருவமுறை, இறுதி ஆண்டுத் தேர்வுகளும், கல்வி ஆண்டு -2009 மாணவர்களுக்குரிய சான்றிதழ் படிப்பு இறுதித் தேர்வுகளும், கல்வி ஆண்டு மாணவர்களின் நிலுவை பாடங்களுக்கான தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.


இத்தேர்வுகள், இந்தியா முழுவதும் 73 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளன.முறைசாரா கல்வித் திட்டத்தின் கீழ் சேர்ந்துள்ள மாணவர்களுக்கான ஆயத்த பாடத் தேர்வு வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது.


தேர்வு நுழைவுச் சீட்டுகள், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தின் www.tnou.ac.in மற்றும் www.kalvimalar.com இணையதளங்களில் உள்ளன. மாணவர்கள், தங்களுக்கான தேர்வு நுழைவுச் சீட்டுக்களை மேற்கண்ட இணையதளங்களிலிருந்து பெற்று, அடையாள அட்டையுடன் தேர்வுக்கு செல்ல வேண்டும். மாணவர்கள், கல்வி மையங்களிலிருந்தும் தேர்வு நுழைவுச் சீட்டினை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us