தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விதி மீறிய பள்ளி வாகனத்துக்கு அபராதம்!

விதி மீறிய பள்ளி வாகனத்துக்கு அபராதம்!

விதி மீறிய பள்ளி வாகனத்துக்கு அபராதம்!


UPDATED : டிச 04, 2009 12:00 AM

ADDED : டிச 04, 2009 12:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 04, 2009 12:00 AM ADDED : டிச 04, 2009 12:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வேதாரண்யம் அருகே பள்ளி குழந்தைகள் சென்ற வேன், குளத்தில் கவிழ்ந்ததில் ஒரு ஆசிரியை மற்றும் ஒன்பது குழந்தைகள் நீரில் மூழ்கி இறந்தனர். அச்சம்பவத்தையடுத்து ஆத்தூரில் பள்ளிக்கு சென்ற மினி பஸ் தென்னை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 20 மாணவ, மாணவிகள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தையடுத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நேற்று பள்ளி வாகனங்கள் அனைத்தையும் திடீர் சோதனை நடத்தினர். ஆத்தூர் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களும் சோதனைக்குள்ளாக்கப்பட்டன.


இது குறித்து ஆத்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவானந்தம் கூறியதாவது:ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் பள்ளி பஸ், வேன்கள் விதிகள்படி இயக்கப்படுகிறதா என ஆய்வு செய்யப்படுகிறது. டிரைவர்களாக பணிபுரிபவர்கள் முறையாக லைசென்ஸ் பெற்றிருந்தாலும், பத்து ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
ஆத்தூரில் காமராஜனார் ரோடு, புதுப்பேட்டை, நரசிங்கபுரம் கூட்ரோடு சாலைகளில் பள்ளி வாகனங்கள் தொடர்பாக ஆய்வு செய்தோம். இன்று நான்கு வாகனங்கள் டிரைவர்கள் அனுபவமின்மை, அதிகளவில் மாணவர்களை ஏற்றி சென்றது என வழக்கு பதிவு செய்துள்ளோம். அதிகளவில் மாணவர்கள் ஏற்றி சென்றால் கூடுதலாக இருக்கும் மாணவருக்கு தலா 500 ரூபாய் என பள்ளி நிர்வாகம் மீது அபராதம் விதிக்கப்படும்.
 
அதேபோன்று டிரைவர் அனுபவம் இல்லாதவர்களுக்கும் தலா 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இன்று (நேற்று) காலை 8 மணியளவில் அம்மம்பாளையம் சரஸ்வதி மெட்ரிக் பள்ளி வேனில் அனுபவமின்றி டிரைவர் இருந்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஆத்தூர் பகுதிகளிலுள்ள நான்கு பள்ளி வாகனங்கள் மீது போக்குவரத்து விதி மீறல் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us