தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சம்பள கமிஷனை காரணம் காட்டி பள்ளி நிர்வாகம் அதிரடி

சம்பள கமிஷனை காரணம் காட்டி பள்ளி நிர்வாகம் அதிரடி

சம்பள கமிஷனை காரணம் காட்டி பள்ளி நிர்வாகம் அதிரடி


UPDATED : டிச 04, 2009 12:00 AM

ADDED : டிச 04, 2009 12:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 04, 2009 12:00 AM ADDED : டிச 04, 2009 12:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்த கட்டண வசூலை தடுக்கும் வகையில், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை ஸ்டெர்லிங் சாலையில், குட்ஷெப்பர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.


தமிழக அரசு ஆறாவது சம்பளக் கமிஷனை அறிவித்துள்ள நிலையில், ஆசிரியர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாணவரும் தலா 2,000 வீதம் பணம் கட்ட வேண்டும் என பள்ளி நிர்வாகம் திடீர் சுற்றறிக்கை விடுத்துள்ளது. இந்த திடீர் அறிக்கையால், மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 
பள்ளி நிர்வாகம் விடுத்துள்ள சுற்றறிக்கையில், நமது பள்ளி அரசு உதவி பெறாத பள்ளி என்பதையும், மாணவர்களிடம் வசூலிக்கும் கட்டணத்தைக் கொண்டு, ஆசிரியர்களுக்கும், இதர ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கப்பட்டு வருவதையும் தாங்கள் அறிவீர்கள்.

இந்த ஆண்டு மாநில அரசு ஆறாவது சம்பளக் கமிஷனை அமல்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, ஏற்பட்டுள்ள கூடுதல் செலவை ஈடு செய்வதற்காக, ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் தலா 2,000 ரூபாய் வீதம் செலுத்த வேண்டும்.
பள்ளி வளாகத்தில் உள்ள வங்கியில் வரும் 8ம் தேதி மற்றும் 9ம்தேதிக்குள் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

பள்ளி நிர்வாகத்தின் இந்த திடீர் அறிவிப்பு குறித்து பெற்றோர் தரப்பில் கூறப்படுவதாவது: குட்ஷெப்பர்டு பள்ளியில், 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ஒவ்வொரு மாணவரும் ஆண்டு கட்டணமாக 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலுத்தி வருகின்றனர்.சராசரியாக ஆண்டுக் கட்டணம் மூலமாக இரண்டு கோடி ரூபாயை பள்ளி நிர்வாகம் ஆண்டுதோறும் வசூலிக்கிறது.

பள்ளியில் சராசரியாக 70 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில், ஒருவருக்கு தலா 12 ஆயிரம் ரூபாய் மாத சம்பளம் என வழங்கினாலும், ஒரு ஆண்டுக்கு ஒரு கோடியே 10 லட்ச ரூபாய்தான் பள்ளி நிர்வாகம் செலவிட்டு வருகிறது. கல்விச் சேவை ஆற்றுவதாக கூறி செயல்படும் பள்ளி நிர்வாகம், தற்போது திடீரென ஆறாவது சம்பள கமிஷன் அமலாக்கத்தை காரணம் காட்டி, ஒரு மாணவருக்கு 2,000 ரூபாய் செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது.
 
இந்த கட்டணம் குறித்து பெற்றோர்களை பள்ளி நிர்வாகம் கலந்து ஆலோசிக்கவில்லை. வகுப்பறையில் வைத்து, மாணவர்களிடம் சுற்றறிக்கையை கொடுத்து அனுப்பியுள்ளது. எனவே, ஆறாவது சம்பள கமிஷனை காரணம் காட்டி, பள்ளி நிர்வாகம் கட்டண வசூல் செய்வதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us