தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு குழு அமைப்பு

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு குழு அமைப்பு

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு குழு அமைப்பு


UPDATED : டிச 04, 2009 12:00 AM

ADDED : டிச 04, 2009 12:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 04, 2009 12:00 AM ADDED : டிச 04, 2009 12:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவையில் வரும் 2010ம் ஆண்டு ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டினையொட்டி, ஏற்கனவே ஆய்வரங்க அமைப்புக் குழு மற்றும் ஒருங்கிணைப்புக் குழு அமைக்க தமிழக முதல்வர் கருணாநிதி உத்திரவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, மாநாடு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஒப்புதல் அளிக்கவும், அறிவுரைகள் வழங்கவும் முதல்வர் தலைமையில் மாநாட்டுத் தலைமைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.


இந்தக் தலைமைக் குழுவின் தலைவராக முதல்வர் கருணாநிதியும், துணைத் தலைவர்களாக நிதி அமைச்சர் அன்பழகன் மற்றும் துணை முதல்வர் ஸ்டாலினும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மாநாட்டில் சிறப்பு மலர் வெளியிடுவதற்காக நிதி அமைச்சர் அன்பழகன் தலைமையில் சிறப்பு மலர்க் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.


உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக உத்தமம் எனப்படும் உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றத்துடன் இணைந்து தமிழ் இணைய மாநாடு நடத்தவும் முடிவு செய்யப்பட்டதன் அடிப்படையில், தமிழ் இணைய மாநாட்டுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவிற்கு கான்பூர் ஐ.ஐ.டி.,யின் தலைவர் ஆனந்த கிருஷ்ணன் தலைவராக செயல்பட உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us