தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விரிவுரையாளர்களுக்கு தேர்வில் விலக்கா? அமைச்சகம் எதிர்ப்பு

விரிவுரையாளர்களுக்கு தேர்வில் விலக்கா? அமைச்சகம் எதிர்ப்பு

விரிவுரையாளர்களுக்கு தேர்வில் விலக்கா? அமைச்சகம் எதிர்ப்பு


UPDATED : டிச 04, 2009 12:00 AM

ADDED : டிச 04, 2009 12:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 04, 2009 12:00 AM ADDED : டிச 04, 2009 12:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுகுறித்து, யு.ஜி.சி.,க்கு மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அனுப்பி உள்ள தகவல்: கல்லூரிகளில் விரிவுரையாளர்களாக நியமனம் பெற, தேசியளவிலான தகுதி தேர்வு (நெட்) அல்லது மாநில அளவிலான தகுதி தேர்வு (ஸ்லெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால், யு.ஜி.சி., கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட அறிவிப்பின்படி, பிஎச்.டி., தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்த தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.


இவ்வாறான அறிவிப்பை, யு.ஜி.சி., வெளியிட்டது பொருந்தாது. இவ்விவகாரம் குறித்து ஆணையத்தின் கூட்டத்தில் மறுபரிசீலனை செய்யப்படும் வரை, இது தொடர்பாக வேறு எந்த உத்தரவையும் ஆணையம் பிறப்பிக்கக் கூடாது.இவ்வாறு அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டது.


இதற்கிடையில், கடந்த வாரம் நடைபெற்ற யு.ஜி.சி., கூட்டத்தில், அதன் ஆய்வு குழு சமர்ப்பித்த 15 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் பற்றிய அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பல்கலைக்கழகங்களில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை, ஆனால், போதிய வசதிகள் சிறிது குறைவாக இருப்பதாக சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. அவற்றை பூர்த்தி செய்ய, பல்கலைக் கழகங்களுக்கு கால அவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us