கேட் ஆன்லைன் தேர்வு ரத்து இல்லை: ஐ.ஐ.எம்., அறிவிப்பு
கேட் ஆன்லைன் தேர்வு ரத்து இல்லை: ஐ.ஐ.எம்., அறிவிப்பு
UPDATED : டிச 04, 2009 12:00 AM
ADDED : டிச 04, 2009 01:35 PM
அ நிறம் | அளவு
ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக கேட் தேர்வு இந்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்தப்படுகிறது. சர்வர் கோளாறு, வைரஸ் தாக்கம் என பிரச்சினைகள் ஏற்பட்டு, பல மையங்களில் தேர்வு ரத்து செய்யும் நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக, இந்த புதிய முறை குறித்து மாணவர்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், ஆன்லைன் தேர்வு ரத்து செய்யப்படமாட்டாது என்று ஐ.ஐ.எம்., கேட் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சதீஷ் தியோதர் தெரிவித்துள்ளர்.
