தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் பயிற்றுநர் எழுத்து தேர்வு: பி.எட். பட்டதாரிகள் ஏமாற்றம்

ஆசிரியர் பயிற்றுநர் எழுத்து தேர்வு: பி.எட். பட்டதாரிகள் ஏமாற்றம்

ஆசிரியர் பயிற்றுநர் எழுத்து தேர்வு: பி.எட். பட்டதாரிகள் ஏமாற்றம்


UPDATED : டிச 05, 2009 12:00 AM

ADDED : டிச 05, 2009 01:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 05, 2009 12:00 AM ADDED : டிச 05, 2009 01:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் வட்டார வள மையங்களில் 564 ஆசிரியர் பயிற்றுநர்கள் போட்டி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 30ம் தேதி முதல் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.


வரும் 14ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும். வரும் ஜனவரி மாதம் 31ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் எழுத்து தேர்வு நடக்கிறது. விண்ணப்பத்தின் விலை 50 ரூபாயாகும். இது தவிர தேர்வு கட்டணமாக எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 150 ரூபாயும், மற்றவர்கள் 300 ரூபாயாகவும் பாங்க் டி.டி. மூலம் செலுத்த வேண்டும்.


இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்ளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் விற்றுத் தீர்ந்தன. இதனால் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் பி.எட். பட்டதாரிகள் ஏமாற்றத்துடன் உள்ளனர்.நெல்லையில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு மொத்தம் 2,500 விண்ணப்பங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இரண்டே நாட்களில் விண்ணப்பங்கள் விற்றதால் தொடர்ந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


500 விண்ணப்பங்கள் வந்த 2 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன. இதனால்  ஏராளமான பி.எட். பட்டதாரிகள் விண்ணப்பங்கள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.முதன்மை கல்வி அலுவலகம் மூலம் கூடுதல் விண்ணப்பங்கள் வழங்க கோரி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தகவல் அளித்தும் போதுமான எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வரவில்லை.மாநிலம் முழுவதும் எதிர்பார்த்ததை விட கூடுதல் விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளதால் விண்ணப்பங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
 
இதனால் சென்னை அரசு அச்சகத்தில் கூடுதல் விண்ணப்பங்கள் அச்சிடும் பணி நடந்து வருகிறது.இப்பணி முடிவடையாததால் விண்ணப்பங்கள் முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு விண்ணப்பங்கள் கிடைப்பதில் தாமதமாகி உள்ளது என்று கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.பி.எட். பட்டதாரிகள் வரும் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டிய சூழ்நிலையில் விண்ணப்பங்கள் கிடைக்காததால் குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாம் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலம் விற்றுத் தீர்ந்துள்ளது. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us