பலியான ஒன்பது குழந்தைகள் படித்த பள்ளிக்கு அரசு தடை
பலியான ஒன்பது குழந்தைகள் படித்த பள்ளிக்கு அரசு தடை
UPDATED : டிச 05, 2009 12:00 AM
ADDED : டிச 05, 2009 01:06 PM
அ நிறம் | அளவு
வேதாரண்யம் அருகே கரியாபட்டினத்தில் கலைவாணி மகா மெட்ரிக் பள்ளி உள்ளது. இப்பள்ளி முதன் முதலில் நர்சரி பள்ளியாக மூன்று ஆண்டு செயல்பட்டு வந்தது.
இதன்
தாளாளர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தங்கராசு.இந்தாண்டு, மெட்ரிக் பள்ளி யாக செயல்பட அங்கீகாரம் கேட்டு மாவட்ட கல்வித்துறைக்கு விண்ணப்பித்திருந்தனர். ஆனால், இதுவரை மெட்ரிக் பள்ளியாக செயல்பட அங்கீகாரம் கிடைக்கவில்லை. இருப்பினும், "கலைவாணி மகா மெட்ரிக் பள்ளி&' என்ற போர்டு பள்ளியில் வைக்கப்பட்டு குழந்தைகள் சேர்க்கப்பட்டு இயங்கி வந்தது.நேற்று
முன்தினம் காலை, பள்ளி வேன் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இப்பள்ளியில் பயின்ற ஒன்பது குழந்தைகள் உட்பட ஆசிரியை ஒருவரும் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.இப்பள்ளி தொடர்ந்து செயல்பட தடை விதித்து, நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வீராச்சாமி வெளியிட்ட அறிக்கை:வேதாரண்யம்
அருகே கரியாபட்டினம் கலைவாணி மகா மெட்ரிக் பள்ளி செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரை அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் சேர்த்திடுமாறு பெற்றோர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.