தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவம், பொறியியல் கல்வி பயிலும் அருந்ததியர் மாணவர்களுக்கு உதவி

மருத்துவம், பொறியியல் கல்வி பயிலும் அருந்ததியர் மாணவர்களுக்கு உதவி

மருத்துவம், பொறியியல் கல்வி பயிலும் அருந்ததியர் மாணவர்களுக்கு உதவி


UPDATED : டிச 06, 2009 12:00 AM

ADDED : டிச 06, 2009 10:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 06, 2009 12:00 AM ADDED : டிச 06, 2009 10:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அருந்ததியர் சமுதாய மாணவ, மாணவிகள், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கு உதவுவதற்காக, பெண் சிங்கம் எனும் திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதியதற்காக தனக்கு அளிக்கப்பட்ட 50 லட்ச ரூபாயுடன், சொந்த நிதியில் இருந்து 11 லட்சத்து ஐந்தாயிரம் ரூபாயையும் சேர்த்து, 61 லட்சத்து ஐந்தாயிரம் ரூபாயை முதல்வர் கருணாநிதி, முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கினார்.

நடப்பாண்டில், மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள 56 அருந்ததியர் வகுப்பு மாணவர்கள், பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ள 1,165 மாணவர்கள் என மொத்தம், 1,221 பேருக்கு தலா 5,000 ரூபாய் வீதம், 61 லட்சத்து ஐந்தாயிரம் ரூபாயை, மருத்துவக் கல்வித்துறை இயக்குனர், தொழில்நுட்பக் கல்வித்துறை இயக்குனர் ஆகியோர் மூலம் வழங்கிட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மருத்துவக் கல்வி பயிலும் பத்து மாணவர்களுக்கும், பொறியியல் கல்வி பயிலும் 13 மாணவர்களுக்கும், தலா 5,000 ரூபாயை வழங்கி, 1,221 பேருக்கு கல்வி வளர்ச்சி நிதி வழங்கும் பணியை, முதல்வர் துவக்கி வைத்தார்.இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us