தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாவட்ட கல்வி அலுவலகங்களில் மீண்டும் பள்ளி துணை ஆய்வாளர்கள்

மாவட்ட கல்வி அலுவலகங்களில் மீண்டும் பள்ளி துணை ஆய்வாளர்கள்

மாவட்ட கல்வி அலுவலகங்களில் மீண்டும் பள்ளி துணை ஆய்வாளர்கள்


UPDATED : டிச 07, 2009 12:00 AM

ADDED : டிச 07, 2009 09:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 07, 2009 12:00 AM ADDED : டிச 07, 2009 09:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாவட்ட கல்வி அலுவலகங்களில் பள்ளி துணை ஆய்வாளர் பணியிடங்களை ரத்து செய்து சமீபத்தில் அரசு உத்தரவிட்டது. மேலும், மாவட்ட கல்வி அலுவலர் பணி நியமன பதவி உயர்வுக்கு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கான விகிதாச்சாரமும் 10 சதவீதம் குறைக்கப்பட்டது.

தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் உட்பட இடைநிலை ஆசிரியர்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலர் சாமி சத்தியமூர்த்தி, பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் தம்பிதுரை மற்றும் அமைப்பினருடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.

அப்போது, மீண்டும் பள்ளி துணை ஆய்வாளர் பணியிடம் உருவாக்கப்படுமென அரசு உறுதியளித்தது.கடந்த டிச., 2ம் தேதி அரசு பள்ளி துணை ஆய்வாளர் பணியிடத்தை ரத்து செய்த உத்தரவை, அரசு ரத்து செய்துவிட்டது (அரசாணை எண்: 311). இதனால், அப்பணியிடம் மீண்டும் உயிர் பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us