தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் பயிற்றுனர் போட்டித் தேர்வு விண்ணப்பங்களுக்கு டோக்கன் முறை

ஆசிரியர் பயிற்றுனர் போட்டித் தேர்வு விண்ணப்பங்களுக்கு டோக்கன் முறை

ஆசிரியர் பயிற்றுனர் போட்டித் தேர்வு விண்ணப்பங்களுக்கு டோக்கன் முறை


UPDATED : டிச 08, 2009 12:00 AM

ADDED : டிச 08, 2009 01:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 08, 2009 12:00 AM ADDED : டிச 08, 2009 01:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு


அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 562 வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுனர் காலியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டி எழுத்து தேர்வு மூலம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
 
இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலம் நவம்பர் 30 முதல் விற்பனை செய்யப்படுகின்றன.விண்ணப்பங்களை பெற கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தேனி,விருதுநகர் உட்பட பல மாவட்டங்களில் விற்பனை துவங்கிய முதல் நாளே அனைத்து விண்ணப்பங்களும் விற்று தீர்ந்தன.

தேனி மாவட்டத்திற்கு 1250 விண்ணப்பங்கள் முதலில் வழங்கப்பட்டு இருந்தன. பலர் விண்ணப்பங்கள் கேட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பினர். தேனி மாவட்டத்துக்கு மேலும் கூடுதலாக 500 விண்ணப்பங்கள் வந்திருந்தன. இந்த விண்ணப்பங்களை பெற ஆயிரம் பேர் வரை திரண்டு இருந்ததால் விற்பனை துவங்கிய பத்து நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால் தள்ளுமுள்ளு நிலவியது.
 
இதனை தொடர்ந்து விண்ணப்பங்கள் கிடைக்காதவர்களுக்கு டோக்கன் வழங்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வகுமார் உத்தரவிட்டார். டோக்கன் முன்னுரிமை அடிப்படையில் இனி வரும் விண்ணப்பங்கள் வழங்கப்படும்&' என அவர் தெரிவித்தார். 900 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us