தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆதிதிராவிட மாணவர்களுக்கு ஸ்டாலின் பரிசுத் தொகை!

ஆதிதிராவிட மாணவர்களுக்கு ஸ்டாலின் பரிசுத் தொகை!

ஆதிதிராவிட மாணவர்களுக்கு ஸ்டாலின் பரிசுத் தொகை!


UPDATED : டிச 09, 2009 12:00 AM

ADDED : டிச 09, 2009 05:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 09, 2009 12:00 AM ADDED : டிச 09, 2009 05:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், தமிழை ஒரு பாடமாக படித்து, 10ம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும், 12ம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பெறுவோருக்கு 25 ஆயிரம் ரூபாயும் பரிசுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.




கடந்த மார்ச் மாதம் நடந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு துணை முதல்வர் ஸ்டாலின் ரொக்கப் பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.


இதில், 10ம் வகுப்பு ஆதிதிராவிடர் மாணவியர் பிரிவில் நெல்லையைச் சேர்ந்த ரேவதி, மாணவர் பிரிவில் தென்காசியைச் சேர்ந்த கார்த்திக்குமார், பழங்குடியினர் பெண்கள் பிரிவில் திருச்சி பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த தாரணி, மாணவர் பிரிவில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜிஷாந்த் ஆகியோர் முதலிடம் பெற்று பரிசுகள் பெற்றனர்.


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுக்காக, ஆதிராவிடர் அல்லாத சிறந்த எழுத்தாளர்கள் 11 பேர் தேர்வு செய்யப்பட்டதில், ஒவ்வொரு சிறந்த நூலுக்கும் 20 ஆயிரம் ரூபாய் நிதியுதவி மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை, துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.மேலும், ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதும் ஆதிதிராவிட இளைஞர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் 24 பேருக்கு மொத்தம் ஆறு லட்சம் ரூபாய் நிதியுதவியை, துணை முதல்வர் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us