தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிக்கு பூட்டு போட முயற்சி: சிதம்பரம் அருகே பரபரப்பு

பள்ளிக்கு பூட்டு போட முயற்சி: சிதம்பரம் அருகே பரபரப்பு

பள்ளிக்கு பூட்டு போட முயற்சி: சிதம்பரம் அருகே பரபரப்பு


UPDATED : டிச 09, 2009 12:00 AM

ADDED : டிச 09, 2009 04:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 09, 2009 12:00 AM ADDED : டிச 09, 2009 04:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலூர் மாவட்டம், குமராட்சி அடுத்த பூலாமேடு கிராமத்தில் உள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 134 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மூன்று ஆசிரியர்கள் மட்டுமே உள்ளதால், போதிய முறையில் கல்வி கற்பிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என அதிகாரிகளிடம், கல்விக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் முறையிட்டனர். ஆனால், கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.


கல்விக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், கூடுதல் ஆசிரியர் நியமிக்கக் கோரி, நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டனர். வகுப்பறைகளில் இருந்து மாணவர்களை வெளியேற்றி, பள்ளிக்குப் பூட்டு போட முயன்றனர். தகவலறிந்த சிதம்பரம் தாசில்தார் தனவந்தகிருஷ்ணன் மற்றும் போலீசார், கல்விக்குழு உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டம் குறித்து, கல்வித்துறை அதிகாரிக்கு தாசில்தார், தகவல் தெரிவித்தார். நாளை (இன்று) கூடுதல் ஆசிரியர் நியமிப்பதாக கல்வித்துறை அதிகாரி கூறியதையடுத்து, கிராம மக்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us