தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சமச்சீர் கல்வியில் கடவுள் வாழ்த்து அவசியம்: திருவாவடுதுறை ஆதீனம்

சமச்சீர் கல்வியில் கடவுள் வாழ்த்து அவசியம்: திருவாவடுதுறை ஆதீனம்

சமச்சீர் கல்வியில் கடவுள் வாழ்த்து அவசியம்: திருவாவடுதுறை ஆதீனம்


UPDATED : டிச 10, 2009 12:00 AM

ADDED : டிச 10, 2009 01:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 10, 2009 12:00 AM ADDED : டிச 10, 2009 01:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாவடுதுறை ஆதீனத்தில் நடந்த விருது வழங்கும் விழாவின் போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:


திருக்குறளை ஏற்பவர்கள் கடவுள் வாழ்த்தை ஏற்கத் தயக்கம் காட்டுவது தவறு. திருக்குறளில் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் 10 குறள்கள் அமையப் பெற்றுள்ளன. எனவே, சமச்சீர் கல்வி முறையில் கடவுள் வாழ்த்து இடம் பெறுவது அவசியம்.

கடவுள், கருணை வடிவானவர். சிறுசிறு நிகழ்வுகள் நடந்தாலும் உலகம் அழியாது. அது பற்றி மக்கள் அச்சப்படத் தேவையில்லை. மக்கள் நிம்மதியாக வாழ, இறைவனை பிரார்த்திக்க வேண்டும். நடக்கவுள்ள உலகச் செம்மொழி மாநாட்டில் ஆதீனத்தின் சார்பில் புலவர்கள் கலந்து கொண்டு, சமய ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க உள்ளனர். அரசு, தமிழறிஞர்கள் பிறந்த ஊரில் நினைவிடம் அமைத்து, அதில் அவர்களது படைப்புகளை இடம் பெறச் செய்து பெருமைப்படுத்த வேண்டும்.


சமய தமிழ் அறிஞர்களைக் கவுரவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். கோவில் தல வரலாறு போன்ற தமிழ் நூல்களை மலிவு விலையில் மக்கள் வாங்கி பயன் பெற, அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழ் வளர்ச்சிக்கு நாயன்மார்கள், ஆழ்வார்களின் பங்களிப்பு மிகப் பெரியது. அவர்கள் பெயரில் விருதுகள் வழங்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு பரமாச்சாரியார் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us