UPDATED : டிச 10, 2009 12:00 AM
ADDED : டிச 10, 2009 01:42 PM
அ நிறம் | அளவு
கத்தோலிக்க கல்வி சங்கங்களின் பள்ளிகளில் பணிபுரியும் குருக்கள், சகோதரர்கள், கன்னியாஸ்திரிகள் இறையியல் கல்வி மற்றும் பயிற்சி பெற மூன்று ஆண்டுகள் சம்பளம் இல்லாத விடுமுறை வழங்கப்படுகிறது.
இந்த பயிற்சி பெறுபவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் சம்பளம் இல்லாத விடுமுறை எடுத்து, அதற்கு அரசிடம் தளர்வாணை கேட்டு விண்ணப்பிக்கின்றனர். தற்போது அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், இனிமேல் மூன்று ஆண்டுகளுக்கு மேல் சம்பளம் இல்லாத விடுமுறை வழங்க முடியாது. யாரும் அதிக காலம் விடுப்பு எடுத்து தளர்வாணை கேட்டு விண்ணப்பிக்க முடியாது என தெரிவித்துள்ளது.
