தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தவறான கேள்விக்கு ஒரு மதிப்பெண்: ஐகோர்ட் கிளை உத்தரவு

தவறான கேள்விக்கு ஒரு மதிப்பெண்: ஐகோர்ட் கிளை உத்தரவு

தவறான கேள்விக்கு ஒரு மதிப்பெண்: ஐகோர்ட் கிளை உத்தரவு


UPDATED : டிச 10, 2009 12:00 AM

ADDED : டிச 10, 2009 01:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 10, 2009 12:00 AM ADDED : டிச 10, 2009 01:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரையை சேர்ந்த ராமலிங்கம், சசிக்குமார் தாக்கல் செய்த ரிட் மனு: தமிழகத்தில் 2006-2007ம் ஆண்டுக்கான எஸ்.ஐ., தேர்வில் கலந்து கொண்டோம். உடல் திறன் தேர்வு, எழுத்து தேர்வில் வெற்றி பெற்றோம். நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டோம். எங்களை எஸ்.ஐ., பணிக்கு அதிகாரிகள் தேர்வு செய்யவில்லை. எங்களுக்கு 73 மதிப்பெண்கள் கிடைத்தன.


ஆனால் கட் அப் மதிப்பெண் 74. ஒரு மதிப்பெண்ணில் வாய்ப்பு பறிபோனது. தேர்வில் 44வது கேள்வி தவறாக கேட்கப்பட்டிருந்தது. இதனால்ஒரு மதிப்பெண் எங்களுக்கு குறைந்தது. தவறான கேள்விகளுக்கு ஒரு மதிப்பெண் வழங்கி, எங்களை எஸ்.ஐ.,பணிக்கு தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி கே.என்.பாஷா, எஸ்.ஐ., தேர்வில் 11, 38, 44 வது கேள்விகள் தவறாக கேட்கப்பட்டுள்ளன. அந்த கேள்விகளுக்கு பதிலளித்து பணிக்கு தேர்வாகாதவர்களுக்கு தலா ஒரு மதிப்பெண் வழங்க ஏற்கனவே ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 44வது கேள்வி தவறாக இருந்ததால் மனுதாரர்களுக்கும் தலா ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும். இந்த கூடுதல் மதிப்பெண் அடிப்படையில் 2 பேரையும் எஸ்.ஐ., பணிக்கு தேர்வு செய்வது குறித்து மூன்று மாதங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us