பஸ் வசதியற்ற கிராமப்புற மாணவர்களின் ஆபத்தான டெம்போ பயணம்
பஸ் வசதியற்ற கிராமப்புற மாணவர்களின் ஆபத்தான டெம்போ பயணம்
UPDATED : டிச 11, 2009 12:00 AM
ADDED : டிச 11, 2009 09:51 AM
வந்தவாசி தொகுதிக்கு உட்பட்ட பல கிராமங்களில், இதுவரை சாலை வசதியும், பஸ் வசதியும் இல்லை. இதனால் மாணவர்கள், 3 முதல் 5 கி.மீ., வரை நடந்து வந்து, தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும், மினி லாரி மற்றும் டெம்போ வேன்கள் மூலம் பள்ளிக்கு செல்கின்றனர்.
காலை 9 மணிக்கு மேல் வகுப்புகள் துவங்கினாலும், 7 மணிக்கே புறப்பட வேண்டியுள்ளது. நடந்தே தேசிய நெடுஞ்சாலைக்கு வரும் இவர்கள், பரிதாபப்பட்டு ஒரு சில மினி லாரி, டெம்போ மற்றும் ஆட்டோக்கள் நின்றால், அதில் ஏறி பள்ளிகளுக்கு செல்கின்றனர்.
மாலை நேரத்திலும் இதேபோல் சிரமப்பட்டு, இரவு 7 மணிக்கு தான் வீட்டிற்கு செல்லும் அவலம் உள்ளது. இதில் மாணவிகளின் நிலை, மிகவும் பரிதாபமாக உள்ளது. சிலர் பாதுகாப்பு கருதி, பெண்களை உயர்கல்வி பயில அனுப்பவில்லை. எனவே, பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு போக்குவரத்தை ஏற்படுத்த, அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
