உயர்கல்வி தகுதி பதிவு செய்தோருக்கு வேலைவாய்ப்பு அலுவலக அறிவிப்பு
உயர்கல்வி தகுதி பதிவு செய்தோருக்கு வேலைவாய்ப்பு அலுவலக அறிவிப்பு
UPDATED : டிச 12, 2009 12:00 AM
ADDED : டிச 12, 2009 07:59 AM
அருந்ததியர், சக்கிலியன், மாதாரி, மாதிகா, பகடை, தோட்டி, ஆதிஆந்திரா ஆகியோர் அருந்ததியினராக வகைப்படுத்தப் பட்டுள்ளனர். இவ்விவரம் வேலை வாய்ப்பு அலுவலக பதிவேட்டில் குறிக்க வேண்டியுள்ளது.
மதுரை அலுவலகத்தின் கீழ் வரும் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, ஈரோடு, நீலகிரி, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை மாவட்ட பொறியியல், மருத்துவம், முதுகலை பட்டதாரி போன்றோர் மேற்குறிப்பிட்ட தங்கள் ஜாதிச் சான்றிதழ், வேலை வாய்ப்பு அலுவலக அட்டையின் பிரதியை (கெஜட்டட் அதிகாரி சான்று பெற்று) வேலைவாய்ப்பு அலுவலர், தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலகம், கோ.புதூர், மதுரை-7&' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஏற்கனவே விண்ணப்பித்தோர் அனுப்ப தேவையில்லை.
கலை பண்பாட்டுத் துறை சார்பில் நெசவுக்கலை, காட்சிவழித் தொடர்பு வடிவமைப்பு, செராமிக் பணிகளுக்கு காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட துறையில் இளநுண்கலை கல்வியில் (பி.எஸ்சி.,/பி.எப்.ஏ.,) முதல் வகுப்பு தேர்ச்சி பெற்றோர், கற்பித்தல், வடிவமைத்தல் மற்றும் செயல்படுத்தலில் மூன்று ஆண்டு அனுபவம் பெற்றோர், 2009 ஜூலை 1ம் தேதி அன்று 40 வயதுள்ளவர்கள் சிபாரிசு செய்யப்பட உள்ளனர். தகுதியுள்ளோர் வரும் 18க்குள் நேரில் வந்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.ஊனமுற்றோர் மறுவாழ்வு துறை ஸ்பீச் தெரபிஸ்ட் கம் ஆடியோலஜிஸ்ட் காலிப்பணியிடம் அறிவித்துள்ளது.
2009 டிச., 7ம் தேதி அன்று வரை பி.எஸ்சி., ஸ்பீச் தெரபிஸ்ட் அண்ட் ஆடியாலஜி கல்வித் தகுதி பதிவு, 2009 ஜூலை 1ம் தேதி அன்று 35வயதுக்கு கீழ் (அரசு விதிப்படி வயது தளர்வு உண்டு) போன்ற தகுதியுள்ளோர் பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து அலுவலகத்தை நேரடியாக டிச., 15க்குள் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் என்.மகாலட்சுமி தெரிவித்தார்.
