விவசாயம், கல்விக் கடனுக்கு கனரா வங்கி முக்கியத்துவம்
விவசாயம், கல்விக் கடனுக்கு கனரா வங்கி முக்கியத்துவம்
UPDATED : டிச 12, 2009 12:00 AM
ADDED : டிச 12, 2009 08:07 AM
மதுரையில் அவர் கூறியதாவது: தென் மண்டலத்தில் கதர் கிராமத்தொழில்கள் ஆணைய வேலைவாய்ப்புத் திட்டங்களுக்கு கடன் வழங்குவதில் சிறந்த வங்கியாக கனரா வங்கி ( 2008-09) தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கனரா வங்கியின் வாடிக்கையாளர்கள் 35.83 மில்லியன் பேர். மொத்த வர்த்தகத்தில் உள்நாட்டு வர்த்தகம் 97.8 சதவீதம் ஆகும். கடன் வசூல் 1.63 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைவிட வட்டியில்லாத வருவாய் 20.2, குறைந்த வட்டியுடன் கூடிய டிபாசிட் 52, விவசாயக் கடன் 20, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 33, கல்வி 30, வீடு 25.4, சில்லரைக் கடன் 16 சதவீதம் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 2.89 லட்சம் சுய உதவிக்குழுக்கள் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளன.
நடப்பு ஆண்டில் டிபாசிட் 2.25, கடன் இலக்கு 1.75 லட்சம் கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள இலக்கைவிட விவசாயம், கல்விக்கு மூன்று மடங்கு கடன் வழங்கியுள்ளோம். இந்தியாவில் ஐந்து மாநிலங்களில் 26 மாவட்டங்களில் கனரா வங்கி முன்னோடி வங்கியாக திகழ்கிறது.மேலும் 2010 மார்ச்சிற்குள் 2800 லிருந்து 3000 கிளைகளாக அதிகரிக்கப்படும். வெளிநாடுகளில் மூன்று கிளைகள் துவக்கப்படும். வங்கி செலவினங்களை கட்டுப்படுத்த சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார். துணைப் பொது மேலாளர் பாலசுந்தர், உதவி பொது மேலாளர்கள் கே.பி.பை, விஸ்வநாதன் உடனிருந்தனர்.
