தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செய்முறை தேர்வுக்கு முன் எழுத்து தேர்வு வருமா?

செய்முறை தேர்வுக்கு முன் எழுத்து தேர்வு வருமா?

செய்முறை தேர்வுக்கு முன் எழுத்து தேர்வு வருமா?


UPDATED : டிச 13, 2009 12:00 AM

ADDED : டிச 13, 2009 01:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 13, 2009 12:00 AM ADDED : டிச 13, 2009 01:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆண்டுதோறும் பிப்ரவரி மாத முதல் வாரத்தில் துவங்கி 12 நாட்களுக்குள் மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் நடக்கின்றன. இதைத் தொடர்ந்து மார்ச் மாதம் முதல் வாரத்தில் எழுத்து தேர்வுகள் ஆரம்பிக்கும்.

செய்முறை தேர்வுகளுக்கும், எழுத்து தேர்வுகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்கள், பள்ளிகளுக்கு செல்வதில்லை. இதனால் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் தொடர்பில்லாமல் போய் விடுகிறது. அத்தகைய நேரத்தில் தேர்வு தொடர்பான குறிப்புகள், தேர்வை சந்திக்கும் நுணுக்கங்கள், கடைசி நேர தகவல்களை மாணவர்களும், ஆசிரியர்களும் பகிர்ந்து கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.

ஆனால் செய்முறை தேர்வுக்கும், எழுத்து தேர்விற்கும் இடைப்பட்ட காலத்தில் மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்கள் மட்டும் தொடர்ந்து பள்ளிக்கு செல்கின்றனர். இதுவே தனியார் பள்ளி மாணவர்களை விட அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணம் என்ற கருதப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளாகவே மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மத்தியில் இக்கருத்து எழுந்து வருகிறது. தமிழக அரசும் இக்கருத்து பற்றி கடந்த மூன்று ஆண்டுகளாக தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. கடந்தாண்டு தேர்வுக்கு முன்னதாக நடந்த ஆய்வு கூட்டத்தில் இது குறித்து விரிவாக
விவாதிக்கப்பட்டது. அதன்பின்னர் அத்திட்டத்தை இந்த ஆண்டு முதல் அமலுக்கு கொண்டு வரலாம் என தள்ளி வைக்கப்பட்டது. தற்போது பொதுத் தேர்வுக்கான நாட்கள் நெருங்கி கொண்டிருப்பதால் மீண்டும் தேர்வு முறை மாற்றம் குறித்து விவாதம் எழுந்துள்ளது.

இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: செய்முறை தேர்வுக் கான 50 மதிப்பெண்களில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்களும், 150 மதிப்பெண் கொண்ட எழுத்து தேர்வில் குறைந்த பட்சம் 30 மதிப்பெண்களும் எடுக்கவேண்டும் என்பது விதிமுறை. ஆனால், பல மாணவர்கள் செய்முறை தேர் வில் 50க்கு 50 மதிப்பெண்கள் பெற்றும் எழுத்து தேர்வில் 30 மதிப்பெண் பெறமுடியாமல் தோல்வியை தழுவுகின்றனர்.

செய்முறை தேர்வுக்கும், எழுத்து தேர்வுக்கும் இடைப்பட்ட காலத்தில் மாணவர்கள் தொடர்ச்சியாக பள்ளிக்கு வந்தால் எழுத்து தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் பெற வழிபிறக்கும் என்பது ஆசிரியர்களின் கருத்து. மாணவர்களின் தோல்வி சதவீதத்தை இந்த மாற்றத்தின் மூலம் போக்க முடியும் என்ற வலுவான கருத்தும் உள்ளது.

செய்முறை தேர்வை எழுத்து தேர்வுக்கு பின் நடத்தினால் தேர்ச்சி சதவீதம் கண்டிப்பாக உயரும். இந்த மாற்று திட்டம் குறித்து தமிழக அரசு முன் கூட்டியே முடிவெடுத்து அறிவித்தால் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மத்தியில் உள்ள குழப்பம் நீங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனிடையே பொதுத் தேர்வுகளுக்கான தற்காலிக அட்டவணையை தேர்வுத் துறை தயாரித்து வைத்துள்ளது. வந்தவாசி, திருச் செந்தூர் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிந்தபின் இதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடைமுறையில் உள்ளபடி செய்முறை தேர்வு நடப்பதாக இருந்தால் ஜனவரி முதல் வாரத்திலேயே அறிவிப்பு வெளியிட வேண் டும். எனவே புதிய தேர்வு திட்டம் குறித்து தமிழக அரசு முக்கிய முடிவை அறிவிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us