சுற்றுலா வினாடி- வினா போட்டி வெற்றியாளருக்கு பரிசளிப்பு
சுற்றுலா வினாடி- வினா போட்டி வெற்றியாளருக்கு பரிசளிப்பு
UPDATED : டிச 14, 2009 12:00 AM
ADDED : டிச 14, 2009 09:35 AM
போட்டியில் 19 கல்லூரிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குழுக்கள் கலந்து கொண்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. சாஸ்திரா பல்கலைக்கழக அணி உட்பட வெற்றி பெற்றவர்களுக்கு திருச்சி கலெக்டர் சவுண்டையா பரிசுகள் வழங்கி பேசியதாவது:
முந்தைய ஆண்டுகளில் குவிஸ் போட்டிகள் மிகவும் பிரபலமாக இருந்து வந்தது. காலப்போக்கில் குவிஸ் போட்டிக்கு மவுசு குறைந்து விட்டது. தற்போது நடத்தப்படும் போட்டிகளில் எளிதான கேள்விகள் கேட்கப்பட்டு மலிவான விளம்பரம் தேடப்படுகிறது. நூலகங்களுக்கு செல்லும் பழக்கம் போய் தற்போது இ-லேர்னிங் முறை வந்துவிட்டது. இ-லேர்னிங் மூலம் புத்தங்கள் படிப்பது போல் ரிலாக்சாக படிக்க முடியாது என்பது ஒரு குறை.
இன்டர்நெட்டில் பல அரிய விஷயங்கள் கிடைக்கிறது. ஆனால் அவற்றில் 90 சதவீதம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பது வருத்தமளிக்கிறது. இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களை பொறுத்த வரை படித்து முடித்த பின் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற மனநிலையே அதிகம் காணப்படுகிறது. உலகத்தை பற்றி அதிகம் தெரிந்து கொள்வதில்லை.
இந்த நிலை மாற வேண்டும். மாணவர்களுக்கு உலக அறிவு அதிகம் தேவை. ஆகையால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எதையாவது படிக்கவேண்டும். இதன்மூலம் உலக அறிவு வளரும். கற்பதற்கு எல்லையே இல்லை என்றார். விழாவில் இன்டர்நெட் உபயோகிப்பாளர் சங்க நிறுவனரும், ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியின் முதல்வருமான மீனா, திருச்சி சுற்றுலா கூட்டமைப்பின் துணைத்தலைவர் வாசுதேவன், செயலாளர் ரவிச்சந்திரன், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மேலாளர் டொனால்டு குரியன், புனித வளனார் கல்லூரி முன்னாள் துணை முதல்வர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
