தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மே மாதத்தில் முடியும் அண்ணா நூற்றாண்டு நூலக பணிகள்

மே மாதத்தில் முடியும் அண்ணா நூற்றாண்டு நூலக பணிகள்

மே மாதத்தில் முடியும் அண்ணா நூற்றாண்டு நூலக பணிகள்


UPDATED : டிச 14, 2009 12:00 AM

ADDED : டிச 14, 2009 09:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 14, 2009 12:00 AM ADDED : டிச 14, 2009 09:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை கோட்டூர்புரத்தில், அண்ணா நூற் றாண்டு நினைவு நூலக கட்டுமானப் பணிகள் கடந்த 2008ம் ஆண்டு நவம் பரில் துவங்கப்பட்டு, 18 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது.எட்டு ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில், மூன்று லட்சத்து 71 ஆயிரத்து 379 சதுரடியில், நவீன நூலகம் கட்டப்பட்டு வருகிறது.

கட்டடத்தின் உயரம் 42 மீட்டர்.தரைதளத்துடன் எட்டு மாடிக் கட்டடத்தில் நூலகம் அமைகிறது. கலந் தாய்வு, உணவுக் கூடம் மற்றும் பல வசதிகளுடன் வெளிநாட்டுத் தரத்தில் நூலகம் அமைகிறது.பொது நூலகக் கட்டடத்தை முதல்வர் கருணாநிதி பார்வையிட்டார். இந்த நூலகக் கட்டுமானப் பணிகள் எப்போது நிறைவு பெறும்? என நிருபர்கள் கேட்டனர். வரும் 2010 மே மாதம் முடிவுறும் என முதல்வர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us