தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ராணுவத்தில் பெண்கள்: அரசு விரைவில் முடிவு

ராணுவத்தில் பெண்கள்: அரசு விரைவில் முடிவு

ராணுவத்தில் பெண்கள்: அரசு விரைவில் முடிவு


UPDATED : டிச 15, 2009 12:00 AM

ADDED : டிச 15, 2009 07:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 15, 2009 12:00 AM ADDED : டிச 15, 2009 07:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுகுறித்து, லோக்சபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி பதிலளித்துப் பேசியதாவது:

ராணுவம், விமானப்படை, கடற்படை என மூன்றிலுமே, போ ரின் போது சண்டைக்கு செல்லும் படையில், பெண்களை ஈடுபடுத்துவது குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது. ஏற்கனவே அமெரிக்கா, ஐரோப்பா, ஜப் பான் ஆகிய நாடுகளில், ராணுவத்தில் பெண்களும் ஈடுபடுத்தப்பட்டிருப்பது குறித்து, ஆய்வு செய்யப் பட்டு வருகிறது.

இந்த ஆய்வு முடிந்தவுடன், உரிய முடிவு எடுக்க மத்திய அரசு நினைத் துள்ளது. 1992ம் ஆண்டு முதன்முறையாக ராணுவத்தில் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். 2007ம் ஆண்டு ராணுவத்தில் பெண்கள் 398 பேர் பணியாற்றி வந்தனர். இந்த எண்ணிக்கை, 2009ம் ஆண்டு 432 ஆக உயர்ந்துள்ளது. எனவே போரின் போது களத்தில் சண்டையில் ஈடுபடுவதற்கு, ராணுவத்தில் பெண்களையும் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அந்தோணி கூறினார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us