தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செம்மொழி மாநாட்டிற்காக கூடுதலாக நான்கு குழுக்கள்

செம்மொழி மாநாட்டிற்காக கூடுதலாக நான்கு குழுக்கள்

செம்மொழி மாநாட்டிற்காக கூடுதலாக நான்கு குழுக்கள்


UPDATED : டிச 15, 2009 12:00 AM

ADDED : டிச 15, 2009 07:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 15, 2009 12:00 AM ADDED : டிச 15, 2009 07:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 மாநாட்டு பணிகளை சிறப்பாக நடத்த, கூடுதலாக நான்கு குழுக்களை முதல்வர் கருணாநிதி அமைத்துள்ளார்.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, பொது அரங்க நிகழ்ச்சிகள் அமைப்புக் குழுவின் தலைவராகவும், மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன், கவிஞர் வாலி உள்ளிட்ட ஒன்பது பேர் துணைத் தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உணவுத் துறை அமைச்சர் வேலு, விருந்தோம்பல் குழுவிற்கு தலைவராகவும், முன்னாள் மத்திய இணையமைச்சர் கண்ணப்பன் உள்ளிட்ட மூன்று பேர் துணைத் தலைவர்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கண்காட்சி அமைப்புக் குழுவின் தலைவராகவும், வனத்துறை அமைச்சர் செல்வராஜ் உள்ளிட்ட ஐந்து பேர் துணைத் தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலாத் துறை அமைச்சர் சுரேஷ் ராஜன், கலை நிகழ்ச்சிகள் மற்றும் சுற்றுலாக் குழுவிற்கு தலைவராகவும், கைத்தறி துறை அமைச்சர் ராமச்சந்திரன் உள்ளிட்ட மூன்று பேர் துணைத் தலைவர்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us