சீனாவில் சர்வதேச கருத்தரங்கம் : புதுச்சேரி பேராசிரியர்கள் பங்கேற்பு
சீனாவில் சர்வதேச கருத்தரங்கம் : புதுச்சேரி பேராசிரியர்கள் பங்கேற்பு
UPDATED : டிச 15, 2009 12:00 AM
ADDED : டிச 15, 2009 08:10 PM
சீன நாட்டில் உள்ள குவாங்சு நகரில் வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை அலிலோபதி கழகத்தின் சார்பில் முதலாவது சர்வதேச மாநாடு நடக்கிறது. தென் சீன வேளாண் பல்கலைக் கழகத்தில் நடக் கும் ஐந்து நாள் மாநாட்டில் உலகெங்கிலும் உள்ள உயிரியல் துறை அறிஞர்கள் கலந்து கொண்டு,
உயிரினங்களிலிருந்து விடப்படும் வேதிப்பொருட்களால் பிற தாவரங்களுக்கு ஏற்படும் தாக்கம் பற்றி கருத்தரங்கில் விவாதிக்கப்படுகிறது.
தமிழ்நாடு ஆசிரியர் பயிற்சி பல்கலைக் கழகத்தின் தேர்வு நெறியாளரும், தாவரவியல் பேராசிரியருமான ஜெயக்குமார் இதன் அமைப்பு குழுவின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள் ளார். அவரது முயற்சியின் விளைவாக தமிழகம், புதுச்சேரியிலிருந்து ஒன்பது பேராசிரியர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரை வழங்க உள்ளனர்.
இதில், புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தைச் சேர்ந்த தாவரவியல் பேராசிரியர்கள் ராமானுஜம், கடம்பன் ஆகியோர் கலந்து கொண்டு, கோவில் காடுகளின் மரங்களால் சுற்றியுள்ள பயிர்களின் மீதான தாக்கம் பற்றிய கட்டுரைகளை வழங்குகின்றனர். கருத்தரங்கில் பங்கேற்பதற்காக இருவரும் 16ம் தேதி இரவு சீனாவிற்கு புறப்படுகின்றனர்.
