தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கால்நடை பல்கலை புரிந்துணர்வு ஒப்பந்தம்

கால்நடை பல்கலை புரிந்துணர்வு ஒப்பந்தம்

கால்நடை பல்கலை புரிந்துணர்வு ஒப்பந்தம்


UPDATED : டிச 16, 2009 12:00 AM

ADDED : டிச 16, 2009 12:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 16, 2009 12:00 AM ADDED : டிச 16, 2009 12:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகமும் இங்கிலாந்தில் உள்ள கால்வ்மெட் என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து, கால்நடை மற்றும் கோழிகளுக்கான நோய் தடுப்பூசிகளை ஏழை விவசாயிகளுக்கு தடையின்றி கிடைக்க வகை செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன.


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் பல்வேறு ஆய்வுகளின் மூலம் கால்நடை மற்றும் கோழிகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தடுப்பூசிகளை கண்டறிந்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள கால்வ்மெட் தொண்டு நிறுவனம் உலகளாவிய அளவில் சிறிய மற்றும் நிலமற்ற விவசாயிகளின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தும் நோக்கத்துடன் செயல்பட்டுவருகிறது.


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் கண்டறிந்துள்ள தடுப்பூசிகளை, கால்வ்மெட் நிறுவனம் மிகப்பெரிய அளவில் தயாரித்து, ஏழை விவசாயிகள் பயன்படும் வகையில் விற்பனை செய்ய உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று நேற்று சென்னையில் கையெழுத்தானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us