தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏ.ஐ.இ.இ.இ.,: சந்தேகங்களுக்கு விளக்கம்

ஏ.ஐ.இ.இ.இ.,: சந்தேகங்களுக்கு விளக்கம்

ஏ.ஐ.இ.இ.இ.,: சந்தேகங்களுக்கு விளக்கம்


UPDATED : டிச 16, 2009 12:00 AM

ADDED : டிச 16, 2009 03:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 16, 2009 12:00 AM ADDED : டிச 16, 2009 03:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு


இத்தேர்வு CBSE மாணவர்களுக்கு எளிதாகவும் மற்றவர்களுக்குக் கடுமையாக-வும் இருக்கும் என்கிறார்களே?


தவறு. குறிப்பாகத் தமிழ் நாட்டில் பிளஸ் 2 பாட திட்டம் சீரமைக்கப்பட்ட பிறகு மாநிலப் பாடதிட்டங்களில் பயில்பவர்களுக்கு எந்தப் பின்னடைவும் இல்லை.



ஏ.ஐ.இ.இ.இ., 2010 க்கான தேர்வு மையங்கள் எத்தனை ,எவை?


2009 ஆம் ஆண்டுத் தேர்வு 85 நகரங்களில் 1460 தேர்வு மையங்களில் நடைபெற்றது. வரும் ஆண்டில் வெளி நாட்டில் துபாய், ரியாத், தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 86 நக-ரங்க-ளில் இத் தேர்வு நடக்கும்.



நுழைவுத் தேர்வு எழுதக் கல்வித் தகுதி, வயதுத் தகுதி எவை?


பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான படிப்பு, இன்ட்டர், 2 ஆண்டு பி.யூ.சி., என்டிஏவின் 2 ஆண்டு படிப்பு, இந்தியப் பல்கலைக்கழகங்களின் இணையத்தினால் பிளஸ் 2க்கு இணையாக ஏற்கப்பட்ட இந்திய/ வெளிநாட்டுப் படிப்புகள்,தேசியத் திறந்த நிலைப் பள்ளியின் மேல் நிலைப் பள்ளித் தேர்வு ஆகியவற்றுடன், ஏ.ஐ.சி.டி.இ., அல்லது மாநிலத் தொழிற் படிப்புத் துறையால் ஏற்கப்பட்ட 3 அல்லது 4 ஆண்டு பொறியியல் பட்டயப் படிப்பு  (DIPLOMA), மேல் நிலைத் தொழில் படிப்பு (VOCATIONAL) ஆகியவற்றில் ஒன்றில் தேறியிருந்தால் போதும். மதிப்பெண் வரம்பு இல்லை. இவற்றில் 2008,09,10 ஆகிய ஆண்டுகளில் தேறியவர்கள் மட்டுமே 2010 நுழைவுத் தேர்வை எழுதலாம்.


பொறியியலுக்கான முதல் தாளை எழுதும் பிளஸ் 2வினர் இயற்பியலையும் கணிதத்தையும் கட்டாயமாகவும், வேதியியல், பயோடெக், கணினியியல், உயிரியல் ஆகியவற்றில் ஒன்றையும் படித்திருக்க வேண்டும். இரண்டாம் தாளை எழுதுவோர், கணிதம் கட்டாயமாகவும், மொத்தத்தில் சராசரி 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்கவும் வேண்டும்.


1.10.2010 அன்று SC/ST/PH பிரிவினர் 30 வயதுக்குள்ளும், மற்றவர்கள் 25 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.



தேர்வு வினாக்களின் வகை, எண்ணிக்கை முதலியவற்றை விளக்கவும்.

நான்கு விடைகளில் ஒன்றைத் தேர்ந்
öடுக்கும் அப்ஜெக்டிவ் வகையிலேயே இரு தாள்களிலும் (இரண்டாம் தாளின் வரையும் பகுதியைத் தவிர்த்து) வினாக்கள் இருக்கும். முதல் தாளில் கணிதம், இயற்பியல், வேதியியல் மூன்று பகுதிகளிலும் சம எண்ணிக்கையில் சம மொத்த மதிப்பெண் கொண்ட வினாக்கள் இருக்கும். வினா எண்ணிக்கையும் மொத்த மதிப்பெண்களும் ஒவ்வோர் ஆண்டும் மாறுபடுகின்றன. கடந்த முறை, பகுதிக்கு 30 ஆக, மொத்தம் 30*3=90 வினாக்கள் இருந்தன; ஒவ்வொரு பகுதியிலும் 6 வினாக்களுக்கு, வினாவுக்கு 8 மதிப்பெண்ணும், மற்ற ஒவ்வொன்றுக்கும் 4 மதிப்பெண் இருந்தது. ஆக மொத்தம் முதல் தாளுக்கு 432 மதிப்பெண் இருந்தது.

கூற்று காரணம் (Assertion Research) வகையிலும், பகுதியைப் படித்து விடையளிக்கும் (Comprehension) வகையிலும் வினாக்கள் இருக்கலாம். கடந்த முறை கணிதம், இயற்பியலில் மொத்தம் 12 வினாக்கள் இவ்வகைப்பட்டவை.



நுழைவுத் தேர்வு எழுதிய அனைவருக்குமே கலந்தாய்வுக்கு அனுமதி உண்டா?


இல்லை. ஒரு கட்ஆப் மதிப்பெண்ணுக்கு மேல் நுழைவுத்தேர்வில் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இந்த கட்-ஆப் ஆண்டுக்கு ஆண்டும், மாணவர்களின் வகைக்கேற்பவும் மாறலாம். கடந்த ஆண்டின் கட்-ஆப் மதிப்பெண்கள்: பொது:100; OBC: 78; SC/ST/PH: 44.



இந்நுழைவுத் தேர்வின் வேறு சிறப்புகள் எவை?


வினாத்தாளை ஆங்கிலம் அல்லது இந்தியில் பெறலாம். இரண்டில் எது வேண்டும் என்று விண்ணப்பத்திலேயே குறிப்பிட வேண்டும்.


தேர்ந்தெடுத்த விடை எண்ணை விடைத்தாளில் உரிய இடத்தில் தீட்டிக் காட்ட வேண்டும். அதற்குப் பேனா/ பால் பேனா மட்டும் மட்டும் தான் பயன்படுத்தலாம். பென்சில் கூடாது. தவறான விடைக்கு மதிப்பெண் கழிவு உண்டு. இது சரியான விடைக்கான மதிப்பெண்ணில் 4ல் 1 பகுதி.


Rough Work செய்ய வினாப் புத்தகத்திலேயே ஒவ்வொரு பக்கத்தின் அடிப்பகுதியிலும், புத்தகத்தின் கடைசியில் சில முழுப் பக்கங்களும் ஒதுக்கப் பட்டுள்ளன. வேறு இடங்களில் எதையும் எழுதக் கூடாது.


அடுத்தடுத்த வினாப்புத்தகங்களில் மூன்று வகை வரிசை மாற்றம் (Jumbling) செய்யப்பட்டிருக்கும்: (1) கணிதம்,  இயற்பியல், வேதியியல் ஆகிய 3 பகுதிகளுக்கிடையிலேயே மாற்றம், (2) ஒவ்வொரு பகுதிக்குள்ளும் வினாக்களின் வரிசையில் மாற்றம், (3) ஒவ்வொரு வினாவுக்கும் உரிய நான்கு விடைகளுக்குள் வரிசை மாற்றம். இவை, பார்த்தெழுதும் (Copying) முயற்சிகளை முறியடிக்கும் முயற்சிகள்.


ஏ.ஐ.இ.இ.இ., இரண்டாம் தாளைப் பற்றிய மற்ற முக்கிய விவரங்கள் என்ன?


இத்தேர்வின் மூலம் Architecture, Building Construction Technology, Interior Design, Planning ஆகிய பாடப் பிரிவுகளில் B.Arch.,/B.Plan படிப்புகளில் சேரலாம். இந்த மூன்று மணி நேரத் தேர்வு, கணிதம், நாட்டம் (Aptitude), வரைதல் (Drawing) ஆகிய பகுதிகள் கொண்டது. முதல் இரண்டு பகுதிகள் அப்ஜெக்டிவ் வகை. நாட்டப்பகுதி, கட்டடவி-யல் தொடர்புள்ள மனிதர்கள், இடங்கள், கட்டுமானங்கள், சுற்றுச்சூழல், இரு பரிமாணப் படங்களிலிருந்து முப்பரிமாணங்களை உருவகித்தலும், வரைதலும், மனவாற்றல் முதலியவை பற்றியது. அடுத்த பகுதியில் முப்பரிமாண உணர்வு, அளவு விகிதம், கட்டட அமைப்பு, வண்ணம், அருவ உருவ வரைவுகள் முதலியவை இடம் பெறும். பொது இடம், கடைத் தெரு, விழாக்காலம், நினைவு மண்டபங்கள் , கேளிக்கைத் தலங்கள், ஆற்றுப் படுகை, காடு, தோட்டம், மரம், செடிகள் ஆகியவற்றை வரைவது, வரையும் பகுதியில் இடம் பெறும்.


இத்தேர்வுக்குக் கருப்பு, வண்ணப் பென்சில்கள், கிரேயான்கள், இன்ஸ்ட்ருமன்ட் பாக்ஸ் முதலியவற்றை மாணவர்களே கொண்டு வர வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us