தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சோனா தொழில்நுட்ப கல்லூரியில் இ-கான்பரன்ஸ் பயிலரங்கம்

சோனா தொழில்நுட்ப கல்லூரியில் இ-கான்பரன்ஸ் பயிலரங்கம்

சோனா தொழில்நுட்ப கல்லூரியில் இ-கான்பரன்ஸ் பயிலரங்கம்


UPDATED : டிச 16, 2009 12:00 AM

ADDED : டிச 16, 2009 02:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 16, 2009 12:00 AM ADDED : டிச 16, 2009 02:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம் சோனா கல்லூரியானது தொழில் நுட்ப கல்வியளிப்பதில் அகில இந்திய அளவில் சிறந்து விளங்குகிறது. மாணவர்களின் தொழில் நுட்ப திறனை ஊக்குவிக்கும் வகையில் ஆராய்ச்சி மற்றும் கற்கும் திறனை மேம்படுத்தும் வகையில் கருத்தரங்குகள், பயிலரங்குகள் மற்றும் பயிற்சி பட்டறைகளை நடத்தி வருகிறது.கற்பித்தல் தொழில் நுட்பங்கள் குறித்து பேராசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், மும்பை இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியுடன் இணைந்து மேம்பட்ட பயிற்றுவித்தல் மற்றும் கம்ப்யூட்டர் தொழில் நுட்பங்கள் குறித்து கற்பித்தல் தொடர்பான இரண்டு வார பயிலரங்களை நடத்தி வருகிறது. மும்பை ஐஐடி செயற்கைக்கோள் ஒளிபரப்பு மூலம் நேரடியாக சோனா கல்லூரியில் இ-கான்பரன்ஸ் முறையில் பயிலரங்கம் நடந்தது.


தமிழகத்தில் உள்ள சுய நிதி இன்ஜினியரிங் கல்லூகளில் சோனா கல்லூரி மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது. இஸ்ரோவின் எஜூசாட் நெட்வொர்க் மூலம் நாட்டின் அனைத்து பகுதி மாணவ மாணவியரும் பயன்பெறும் வகையில் தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்று நவீன தொழில் நுட்பம் குறித்து பயிற்சி பெற்றனர்.இ-கான்பரன்ஸ் மூலம் மத்திய அரசு எடுத்தும் வரும் முயற்சிக்கு, சேலம் சோனா கல்லூரி ஒரு பாலமாக அமைந்தது சிறப்புக்குரியது என கல்லூரி செயலர் தீரஜ்லால் தெரிவித்தார். ஏற்பாடுகளை, பேராசிரியர் சரவணன் மற்றும் குழுவினர் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us