கட்டட வசதியின்றி சமுதாயக் கூடத்தில் செயல்படும் பள்ளி
கட்டட வசதியின்றி சமுதாயக் கூடத்தில் செயல்படும் பள்ளி
UPDATED : டிச 16, 2009 12:00 AM
ADDED : டிச 16, 2009 04:41 PM
அ நிறம் | அளவு
பண்ணைக்காடு பேரூராட்சிக்குட்பட்ட வடகரைப்பாறையில் கடந்த 12 ஆண்டுகளாக சேதமடைந்த சமுதாயக்கூடத்தில் ஆதி திராவிடர் உண்டு, உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு 50 மாணவர்கள் படிக்கின்றனர். ஐந்தாம் வகுப்பு வரை ஒரே அறையில் பாடங்கள் நடத்தப்படுகிறது. அந்த அறையின் ஒரு பகுதிக்குள் விறகும் அடுக்கி வைக்கப்பட்டு சமையலறையாகவும் பயன்படுத்தப்படுகிறது.மழைக் காலங்களில் மழை நீர் உள்ளே வருவதால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இந்த பள்ளிக்கு கட்டடம் கட்ட ரூ.33 லட்சம் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் இடம் இல்லாமல் கட்டடப்பணி நடக்கவில்லை. இது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
