புதுச்சேரி அரசு பள்ளிகளில் வினாத்தாள் மாறியதால் தேர்வு ரத்து
புதுச்சேரி அரசு பள்ளிகளில் வினாத்தாள் மாறியதால் தேர்வு ரத்து
UPDATED : டிச 19, 2009 12:00 AM
ADDED : டிச 19, 2009 02:52 PM
புதுச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புக்கு கடந்த 17ம் தேதி முதல் அரையாண்டு தேர்வுகள் துவங்கும் என அறிவிக் கப்பட்டு, தேர்வு அட்டவணையும் ஏற்கனவே வெளியிடப்பட்டது.
இதற்கிடையில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.இதன் காரணமாக பிளஸ் 1 மாணவ மாணவிகளுக்கு 17ம் தேதி நடப்பதாக இருந்த தமிழ் முதல் தாள் தேர்வு 18ம் தேதி மதியம் நடக்கும் என்றும், 18ம் தேதி காலை நடப்பதாக இருந்த தமிழ் இரண்டாம் தாள் தேர்வு திட்டமிட்டப்படி நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பிளஸ் 1 மாணவ மாணவிகள், தமிழ் இரண்டாம் தாள் தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு வந்தனர். அவர்களுக்கு வினாத்தாள் வழங் குவதற்காக வினாத்தாள் பார்சலை பிரித்தபோது தமிழ் முதல் ளுக்கான வினாத் தாள்கள் இருந்ததால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சில பள்ளிகளில் மட்டும் ஆசிரியர்கள் உஷார் அடைந்து, வினாத்தாள்களை மாணவ மாணவிகளுக்கு வழங்கவில்லை.
ஆனால் பல பள்ளிகளில் வினாத்தாள் மாணவ மாணவிகளுக்கு வழங்கப் பட்டுவிட்டது. பின், தகவல் தெரிந்து அவசர அவசரமாக வினாத்தாள்களைத் திரும்ப பெற்றனர்.வினாத்தாள் மாறியிருக்க வாய்ப்பு உள்ளது என மதியம் நடக்க இருந்த வினாத்தாள் பார்சலை பிரித்தனர். அதிலும் தமிழ் முதல் தாள் வினாத்தாள்களே இருந்தன. இதனால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்தனர். இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குனரகத்துக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டது. வினாத் தாள் மாறியதால் காலையில் நடப்பதாக இருந்த தமிழ் இரண்டாம் தாள் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இருந்தபோதும் பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளை வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை.
காலையில் தவறுதலாக வழங்கப் பட்ட வினாத்தாள்களைப் பெற்ற மாணவ மாணவிகள் கேள்விகளுக்குரிய விடைகளை அவசர அவசரமாக படிக்க துவங்கினர். தங்களது நண்பர்களுக்கும் கேள்வி விபரங்களை தெரிவித்தனர். மதியம் தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. காலையில் வழங்கப்பட்ட வினாத் தாள்களுக்குப் பதில் வேறு வினாத்தாள் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. வினாத்தாள் மாறியதால் காரைக்காலிலும் நேற்று பிளஸ் 1 தமிழ் முதல் தாள் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
