அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் கல்விவரும் கல்வியாண்டில் அமலாகிறது
அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் கல்விவரும் கல்வியாண்டில் அமலாகிறது
UPDATED : டிச 20, 2009 12:00 AM
ADDED : டிச 20, 2009 11:15 AM
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான கம்ப்யூட்டர் பயிற்சி முகாம் நிறைவு விழா மகாலிங்கம் பொறியியல் தொழில் நுட்ப கல்லூரியில் நடந்தது. என்.ஐ.ஏ., பள்ளிகளின் நிர்வாக அலுவலர் சின்னசாமி வரவேற்றார். என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் செயலர் ராமசாமி தலைமை வகித்தார்.
பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கி, பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலர் ராஜகோபால் பேசியதாவது: உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக தேசிய அள வில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) அமல்படுத்தப்படவுள்ளது. இத் திட்டத்தை ஆசிரியர்கள் தான் வெற்றி பெற செய்ய வேண்டும்.
மெட்ரிக் பள்ளிகள் போன்று அரசு பள்ளிகளிலும், ஆறாம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் சார்ந்த கல்வி வரும் கல்வியாண்டு முதல் கற்பிக்கப்படவுள்ளது. இதற்காக, தனியாக ஆசிரியர்கள் நியமிக்க முடியாவிட்டாலும், தற்போதுள்ள ஆசிரியர்களே மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க உத்தரவிட திட்டமிடப்பட்டுள்ளது.அதை கருத்தில் கொண்டு, தற்போது ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பற்ற பயிற்சிகளை மாணவர்களுக்கு தகுந்த முறையில் கற்பிக்க வேண்டும் என்றார்.
ஆசிரியர்களுக்கு மதிப் பெண் சான்றிதழ் தயாரிப் பது, மதிப்பெண் சராசரி சரிபார்ப்பது, இ-மெயில் அனுப்புவது மற்றும் சரிபார்ப்பது, கம்ப்யூட்டர் அடிப்படை ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப் பட்டது. பங்கேற்ற 120 ஆசிரியர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. கம்ப் யூட்டர் பயிற்சி குறித்து ஆசிரியர்களுக்கு தேர்வும் நடந்தது.
