தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஸ்டாலின் முயற்சியால் உதவி பேராசிரியரான அருந்ததிய பெண்

ஸ்டாலின் முயற்சியால் உதவி பேராசிரியரான அருந்ததிய பெண்

ஸ்டாலின் முயற்சியால் உதவி பேராசிரியரான அருந்ததிய பெண்


UPDATED : டிச 22, 2009 12:00 AM

ADDED : டிச 22, 2009 01:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 22, 2009 12:00 AM ADDED : டிச 22, 2009 01:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் தொடர்பியல் துறையில் உதவி பேராசிரியர் பணிக்காக, நேர்காணல் அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. அருந்ததியர் சமுதாயத்தினருக்கான இந்த பணியிடத்திற்கு, நீலகிரி மாவட்டம், குன்னூரில் தெருவோரத்தில் பழக்கடை வைத்து நடத்தும், இந்து அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த பத்துரன் - துளசி தம்பதியின் மகள் ராதா விண்ணப்பித்திருந்தார்.


தமிழக அரசின் ஆதிதிராவிடர் நல மாணவர் உதவித் தொகை மற்றும் வருவாய்த் துறையின் உதவித் தொகை மூலம் ராதா பள்ளிப் படிப்பை நிறைவு செய்து, தொலைத்தொடர்பு கல்வியில் தொடர்பியல் மற்றும் ஊடகவியலில் முதுகலை பட்டம் பெற்றவர். பல்கலை மானியக்குழுவின் தேசிய தகுதித் தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார்.

உதவி பேராசிரியர் பணிக்கான தனது விண்ணப்பத்தையும், கல்வித் தகுதி மற்றும் குடும்ப பின்னணி குறித்தும் துணை முதல்வர் ஸ்டாலினின் இணைய தளத்திற்கு (www.mkstalin.net ) ராதா தெரிவித்திருந்தார்.அத்துடன், பணி நியமனம் தொடர்பாக, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை வெளியிட்டிருந்த அறிவிப்பில், தகுதி வாய்ந்த அருந்ததியினர் இல்லையென்றால், பிற ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருப்பதையும், துணை முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.


பல்கலை நிர்வாகம் முதல் முறை நடத்திய நேர்காணலில், அருந்ததியர் சமூகத்தினர் யாரும் பங்கேற்கவில்லை என்பதால், இரண்டாவது முறையாக நேர்காணல் நடத்தப்படவிருக்கிறது என்றும், இந்த நேர்காணலுக்கு விண்ணப் பித்துள்ள அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரே ஒரு விண்ணப்பதாரர் நான் தான் என்பதால், இட ஒதுக்கீடு மற்றும் உரிய கல்வித் தகுதியுடைய எனக்கு இந்த பணி கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என ராதா வேண்டுகோள் விடுத்தார்.

ராதாவின் கோரிக்கை மனுவின் விவரங்களை சரிபார்த்த துணை முதல்வர், அருந்ததியர் சமுதாயத்திற்கான உள் இடஒதுக்கீட்டுக்குட்பட்ட பணியிடங்களை வேறு வகையில் நிரப்பக்கூடாது என உயர்கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இத்துடன், தகுதி வாய்ந்த அருந்ததியர் இன விண்ணப்பதாரரையே நியமிக்க வேண்டும் எனவும் துணை முதல்வர் பரிந்துரைத்துள்ளார். இதன்படி நடந்த நேர்காணலில், உதவி பேராசிரியராக ராதா தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணை பெற்றுள்ளார்.


இது போலவே, துணை முதல்வர் உத்தரவுப்படி, யோகானந்தன், விஜயகுமார், பாலகுமார் உள்ளிட்ட அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு, உள் இடஒதுக்கீட்டின்படி பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us