UPDATED : டிச 22, 2009 12:00 AM
ADDED : டிச 22, 2009 04:35 PM
அ நிறம் | அளவு
இந்த ரயில் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களுக்கும் சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய சாரணர் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, தெற்கு ரயில்வே சாரணர் இயகத் தின் சார்பில், மூன்று பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயிலில்
கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவின் முக்கிய நகரங்களுக்கு சென்று வரவுள்ள இந்த கண்காட்சி ரயிலில், சாரணர் இயக்கத்தின் வரலாறு, செயல்பாடுகள், சாரண, சாரணியர் சேவைகள் பற்றிய விவரங்கள், ஆபத்து மற்றும் நெருக்கடி காலங்களில் ஆற்றும் அரும்பணிகள் குறித்த புகைப்படங்களும், தகவல்களும் நிறைய இடம் பெற்றுள்ளன.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் முதல் பிளாட் பாரத்தில் நிறுத்தி வைக்கப்பட் டிருக்கும் இக்கண்காட்சி ரயிலை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தீபக் கிரிஷன் நேற்று காலை திறந்து வைத்தார். நாளை இரவு புறப்பட்டு, 24ம் தேதி அரக்கோணம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது.
25ம் தேதி மாலை, அங்கிருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, பாலக்காடு, எர்ணாகுளம், திருவனந்தபுரம், நாகர்கோவில், மதுரை, திருச்சி, விழுப்புரம் ரயில் நிலையங்களுக்கு சென்று விட்டு, வரும் ஜனவரி 18ம் தேதி மீண்டும் சென்னை எழும்பூர் வருகிறது. ஜனவரி 20ம் தேதி வரை எழும்பூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது.
