தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அங்கீகாரம் இல்லாத 79 நர்சரி பள்ளிகளுக்கு நோட்டீஸ்

அங்கீகாரம் இல்லாத 79 நர்சரி பள்ளிகளுக்கு நோட்டீஸ்

அங்கீகாரம் இல்லாத 79 நர்சரி பள்ளிகளுக்கு நோட்டீஸ்


UPDATED : டிச 24, 2009 12:00 AM

ADDED : டிச 24, 2009 01:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 24, 2009 12:00 AM ADDED : டிச 24, 2009 01:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நடந்த பள்ளி வேன் விபத்தில் ஒன்பது மாணவர்களும், ஒரு ஆசிரியையும் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போது அந்த பள்ளி உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பள்ளியை மூடி அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இந்தக் கோர சம்பவத்தின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உரிய அங்கீகாரம் இல்லாமலும், அங்கீகாரம் இருந்தும் உரிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமலும் செயல்படும் பள்ளிகளை கணக்கெடுக்க அரசு உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, ஒவ்வொரு வட்டார அளவிலும் உதவி தொடக்கக்கல்வி அலுவலர், கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர், ஒரு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ஒரு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகிய ஐந்து பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, பள்ளிகளை கணக்கெடுக்கும் பணி துவங்கியது.
இப்படி மாநிலம் முழுவதும் நடந்த கணக்கெடுக்கும் பணியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நர்சரி பள்ளிகள் உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவதும், அங்கீகாரம் பெற்றும் தேவையான கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் பல பள்ளிகள் செயல்படுவதும் தெரியவந்துள்ளது. மாநில அரசின் உத்தரவுப்படி, திருச்சி மாவட்டத்தில் நடந்த கணக்கெடுக்கும் பணியில் மொத்தம் 79 பள்ளிகள் உரிய அங்கீகாரம் இல்லாமலும், அங்கீகாரம் இருந்தும் கட்டமைப்பு வசதி முறையாக இல்லாமலும் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.


இதுகுறித்த அறிக்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் கலெக்டர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையில் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் உரிய அங்கீகாரம் இல்லாமலும், அங்கீகாரம் இருந்தும் கட்டமைப்பு வசதி இல்லாமலும் செயல்பட்டு வந்த 79 பள்ளிகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப மாவட்ட கலெக்டர் சவுண்டையா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அங்கீகாரம் இல்லாத, கட்டமைப்பு வசதிகள் இல்லாத பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் மாவட்ட கல்வித்துறையால் அனுப்பப்பட்டு வருகிறது.


இதுகுறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் சவுண்டையா கூறியதாவது: உரிய அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அவர்கள் பதில் அளிக்க காலஅவகாசம் கொடுக்கப்படும். நோட்டீஸூக்கு பள்ளிகள் அளிக்கும் விளக்கம் திருப்தி அளிக்காவிட்டால் அந்த பள்ளிகள் மூடப்படும். மேற்கண்ட பள்ளிகளில் பயிலும் குழந்தைகளை வேறு பள்ளிகளில் சேர்க்கவும் கல்வித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us