தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழக கல்வித்துறைக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி

தமிழக கல்வித்துறைக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி

தமிழக கல்வித்துறைக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி


UPDATED : டிச 24, 2009 12:00 AM

ADDED : டிச 24, 2009 01:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 24, 2009 12:00 AM ADDED : டிச 24, 2009 01:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு


ஈரோடு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி சீரமைப்பு மாநாடு நடந்தது. பள்ளிக் கல்வி இயக்குனர் பெருமாள்சாமி பேசியதாவது:

தொழில்துறையில் மட்டுமின்றி, கல்வித்துறையிலும் ஈரோடு மாவட்டம் சிறந்து விளங்குகிறது. சென்றாண்டு ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் 95 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் இரண்டாமிடமும், ப்ளஸ் 2 தேர்வில் 91 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர். ஆனால், விருதுநகர் மாவட்டம் 25 ஆண்டுக்கும் மேலாக மாநில அளவில் எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு புரவலர்கள் மூலமாகவும், நன்கொடையாளர்கள் மூலமாகவும் 51 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.

இதற்காக பாடுபட்ட தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள், பொதுநலத் தொண்டு ஆற்றியவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். பள்ளியில் சேர்ந்தது முதல் ப்ளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. இலவச சத்துணவு, இலவச பஸ் பாஸ், இலவச சீருடை, தேர்வு கட்டணம் ரத்து, ஜாதி சான்று, இருப்பிட சான்று, இலவச சைக்கிள், இலவச பாடப்புத்தகம் உட்பட பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. கடந்த மூன்றாண்டாக நபார்டு வங்கி மற்றும் எஸ்.எஸ்.ஏ., திட்ட நிதியின் மூலம் பள்ளிகளுக்கு தேவையான உள் கட்டமைப்பு, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, வகுப்பறை கட்டுதல் போன்ற பணிகள் ஏராளமாக நடந்து வருகிறது. வகுப்பறையில் புரிந்து படிக்கக்கூடிய கல்வி முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் உருவானதுதான் செயல்வழி கற்றல். தினமும் கல்வித்துறையில் புதிய, புதிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்தாண்டு கணினி ஆய்வகம் சில பள்ளிகளில் துவக்கப்பட்டது. நடப்பாண்டு முதல் ஆறாம் வகுப்பில் இருந்து கம்ப்யூட்டர் கல்வி என்ற புதிய பாடத்திட்டம் அமலாகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

பள்ளி சீரமைப்பு மலரை பள்ளி வெளியிட்டு பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் குற்றாலிங்கம் பேசியதாவது:


தமிழகத்தில் 53 ஆயிரம் பள்ளிகள் உள்ளது. ஒரு கோடியே 45 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். நான்கு லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். ஒவ்வொரு ஆண்டுக்கும் பள்ளிக்கல்வித் துறையின் மேம்பாட்டுக்கு தமிழக அரசு பத்தாயிரம் கோடி ரூபாயை ஒதுக்குகிறது. இதில் பெரும்பகுதி ஆசிரியர்களின் சம்பளத்துக்கு சென்று விடுகிறது. மீதமுள்ள தொகை பள்ளியின் கட்டமைப்பு வசதிக்கு செலவு செய்யப்படுகிறது. சமுதாயத்தில் முக்கிய இடத்தை கல்வி டித்துள்ளது. கடந்தாண்டு 1,200 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நபார்டு வங்கி உதவியுடன் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 1,000 கோடி ரூபாய்க்கு கட்டிடம் கட்டித்தரப்படுகிறது. இதில் சமுதாயத்தின் பங்கும் இருக்க வேண்டும் என்பதற்காக பள்ளி சீரமைப்பு மாநாடு ஒவ்வொரு மாவட்டமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். ஈரோடு கலெக்டர் சுடலைக்கண்ணன் பேசியதாவது:


முன்பெல்லாம் சிலவற்றை மட்டுமே பள்ளிக்கு செய்து தர முடியும் என விதி இருந்தது. தற்போது கல்வி சம்பந்தமாக எதை வேண்டுமானாலும் பள்ளிக்கு அன்பளிப்பாக கொடுக்க முடியும் என விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் என்னென்ன தேவை என்பதை தலைமையாசிரியர், ஆசிரியர்கள் இணைந்து பட்டியலிட வேண்டும்; இரண்டாவதாக அதை யாரிடம் இருந்து பெற முடியும் என்ற பட்டியலிட வேண்டும். இதன் மூலம் அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் உறுதிபெறும். தனியார் பள்ளிகளை விட சிறப்பு பெறும். இதற்கு ஆசிரியர்களின் முயற்சி மட்டுமே தேவை. இவ்வாறு அவர் பேசினார்.


மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்குமார் அறிக்கை வாசித்தார். எம்.எல்.ஏ.,க்கள் காங்கேயம் விடியல்சேகர், மொடக்குறிச்சி பழனிசாமி, மேயர் குமார் முருகேஸ், ஈரோடு யூனியன் தலைவர் கோகிலவாணி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சரவணன், வேளாளர் கல்வி நிறுவன தாளாளர் சந்திரசேகர் ஆகியோர் பேசினர். தொடக்க கல்வித்துறை இயக்குனர் தேவராஜன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us