தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி

15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி

15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி


UPDATED : டிச 24, 2009 12:00 AM

ADDED : டிச 24, 2009 05:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 24, 2009 12:00 AM ADDED : டிச 24, 2009 05:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் தமிழகத்தில் செயல்படத் துவங்கி உள்ளதை அடுத்து ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.


முதல் கட்டமாக டிசம்பர் 14ல் இருந்து 18 வரை தமிழகம் முழுவதும் 7,500 இடைநிலை ஆசிரியர்களுக்கு ஐந்து நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாம் கட்டமாக மேலும் 7,500 ஒன்பது, பத்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு ஜனவரி 14 முதல் 18 வரை பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


இதற்காக கல்வி மாவட்டத்திற்கு 120 ஆசிரியர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அந்தந்த மாவட்ட அளவில் உள்ள கல்லூரிகளில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெறும் ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us