UPDATED : டிச 25, 2009 12:00 AM
ADDED : டிச 25, 2009 02:08 PM
இவ்விழாவில் தமிழக கவர்னர் பர்னாலா கலந்துகொண்டு நேரிடையாக 1333 பேர்களுக்கும்,தொலைதூர கல்வி இயக்ககம் முலம் பயின்ற 97,413 பேர்களுக்கும் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி செய்த 264 பேர்களுக்கும் ப.எச்.டி.டாக்டர் பட்டமும்,22பேர்களுக்கு தங்கமெடல்களும்,123 பேர்களுக்கு ரொக்க தொகை உட்பட ஒரு லட்சத்து மூன்று ஆயிரத்து ஐந்நூற்றி இருபத்தி ஏழு பேர்களுக்கு பட்டங்கள் தமிழக கவர்னர் பர்னாலா வழங்கினார்.
இவ்விழாவில் புதுடெல்லி பல்கலைக் கழக மானிய குழுவின் துணைதலைவர் பேராசிரியர் வேத் பரகாஷ் கலந்துக் கொண்டு பட்டமளிப்பு விழா உரையை நிகழ்த்தினார். பல்கலை கழக இணைவேந்தர் டாக்டர்.எம்.ஏ.எம் இராமசாமி, துணைவேந்தர் டாக்டர்.,எம்.இராமநாதன், பதிவாளர் டாகடர் எம்.ரத்தினசபாபதி, கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன், கடலூர் மாவட்ட வருவாய் துறை அதிகாரி நடராஜன், கடலூர் மாவட்ட போலீஸ் எஸ்.ப.,அஸ்வின் கோட்னீஸ்,தமிழக அரசின் ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் சுகன்தீப்சிங் பேடி ஐ.ஏ.எஸ்.மற்றும் பல்கலைகழக சிண்டிகேட்,செனட் உறுப்பினர்கள்,அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள்,மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.
இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் சுகன்தீப்சிங் பேடியின் மனைவி ஜெய்தீப் மகேந்திரா பேடிக்கு பல் மருத்துவத்தில் டாக்டர் ஆப் பிலாசபி என்ற டாக்டர் பட்டத்தை தமிழக கவர்னர் பர்னாலா வழங்கினார்.
