தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அச்சம் தருகிறதா ஆஸ்திரேலியா: தமிழ்ச் சங்க தலைவர் தகவல்

அச்சம் தருகிறதா ஆஸ்திரேலியா: தமிழ்ச் சங்க தலைவர் தகவல்

அச்சம் தருகிறதா ஆஸ்திரேலியா: தமிழ்ச் சங்க தலைவர் தகவல்


UPDATED : டிச 26, 2009 12:00 AM

ADDED : டிச 26, 2009 12:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 26, 2009 12:00 AM ADDED : டிச 26, 2009 12:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு


மதுரை வந்திருந்த அவர் நமது நிருபரிடம் கூறியதாவது:ஆஸ்திரேலியாவில் படிக்க சென்ற இந்திய மாணவர்கள், தாக்கப்படுவதாக சமீபகாலமாக இந்திய மீடியாக்களில் செய்திகள் வெளியாகின. இதைப் படித்து விட்டு, ஆஸ்திரேலியாவில் பயங்கரமான சூழ்நிலை நிலவுவதாக, இந்திய பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் 35 ஆண்டுகளாக வசிப்பவன் என்ற முறையில் கூறுகிறேன், உண்மையில் அதுபோன்ற சூழ்நிலை, அங்கு இல்லை. மெல்போர்ன் நகரில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டது, இரவு 11 மணிக்கு மேல், பழக்கம் இல்லாத இடத்தில் இரவு நேரத்தில் இந்திய மாணவர்கள் ஏன் வெளியே செல்ல வேண்டும்?சில ஆண்டுகளுக்கு முன் வரை, ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்தியர்கள், பகுதி நேர பணிபுரிய அனுமதி கிடையாது. தற்போது சட்டம் திருத்தப்பட்டு, படித்துக்கொண்டே பணிபுரியலாம், என, சட்டம் திருத்தப்பட்டுள்ளது.


ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதாக, தற்போது பரவும் தகவல்களால், அங்கு படித்துக்கொண்டே பணிபுரியும் வாய்ப்பை மறுக்கலாமா, என, அந்நாட்டு அரசு யோசிக்கத் துவங்கி உள்ளது. இதனால் இந்திய மாணவர்கள் தான் பாதிக்கப்படுவர். பகுதி நேரமாக பணிபுரியும் இந்திய மாணவர்கள், நன்கு சம்பாதிக்கின்றனர்.இந்திய மாணவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் இந்திய தூதரகம் போதிய நடவடிக்கை எடுத்துள்ளது, என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us