தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கர்நாடகாவில் தமிழ் மாணவர்கள் ஒட்டுமொத்த பெயில்

கர்நாடகாவில் தமிழ் மாணவர்கள் ஒட்டுமொத்த பெயில்

கர்நாடகாவில் தமிழ் மாணவர்கள் ஒட்டுமொத்த பெயில்


UPDATED : டிச 26, 2009 12:00 AM

ADDED : டிச 26, 2009 02:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 26, 2009 12:00 AM ADDED : டிச 26, 2009 02:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கர்நாடக மாநிலம், பெங்களூரு, கே.ஜி.எப்., பேத்தமங்களா, மைசூரு உள்ளிட்ட பல மாவட்டங்களில், 33 தமிழ் வழி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் செயல்படுகின்றன. அதில், தமிழ், மராத்தி, கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில், மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த செப்டம்பரில் நடந்த இரண்டாம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி தேர்வில், தமிழ் வழி மாணவர்கள் 4,500 பேர் எழுதினர். வெப்சைட்டில் வெளியான தேர்வு முடிவில், தமிழ் வழி மாணவர்கள் அனைவரும் பெயிலாகி இருந்தனர். அதிர்ச்சியடைந்த மாணவர்கள், கல்லூரிகளில் முறையிட்டனர்.


கல்லூரி நிர்வாகத்தினர் கூறியதாவது: கடந்த ஆண்டு வரை, தேர்வுத் தாள்கள், கர்நாடகாவில் திருத்தப்பட்டன. இந்த ஆண்டு முதல், தமிழகத்திற்கு அனுப்பி திருத்தினர்; அவர்கள் தான், பெயில் ஆக்கியுள்ளனர். கர்நாடகாவில் ஆசிரியர் பயிற்சி படிப்பில், நான்கு பாடங்கள் மட்டுமே உள்ளன. தமிழகத்தில் 11 பாடங்கள் படிக்க வேண்டியுள்ளதால், தேர்வு சதவீதம் தமிழகத்தில் குறைந்தும், கர்நாடகத்தில் அதிகரித்ததால், இவ்வாறு செய்துள்ளனர். பாடம் நடத்துவது தான் எங்கள் கடமை. தேர்வு நடத்துவது, முடிவு அறிவிப்பது அனைத்தும் கர்நாடகா பள்ளி, கல்லூரி தேர்வு ஆணையம் தான். அவர்களிடம் தான் கேட்க வேண்டும். இவ்வாறு நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


இதையடுத்து மாணவர்கள், மல்லேஸ்வரத்திலுள்ள கர்நாடகா உயர்நிலைப் பள்ளி தேர்வு ஆணையர் பிரதிமாவிடம் முறையிட்டனர். அவர், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பியுங்கள்; பார்க்கலாம் என கூறினார். முதலாண்டு தேர்வில், 75 சதவீதம் வாங்கிய நிலையில், தற்போது எப்படி பெயிலாவோம்? என்று மாணவர்கள் கேட்டனர். அதற்கு ஆணையரோ, நீங்கள் எழுதிய முதலாம் ஆண்டு தேர்வு, இரண்டாம் ஆண்டு தேர்வுக்கு சேர்த்து தான், தற்போது முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தொந்தரவு செய்தால், போலீசை அழைக்க வேண்டி இருக்கும் என மிரட்டி, அவர்களை வெளியேற்றினார். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், பெங்களூரு தமிழ்ச் சங்க நிர்வாகிகளிடம் முறையிட்டனர். பிறகு, கர்நாடகா ஐகோர்ட் வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்தினர்.


சங்கத் தலைவர் மீனாட்சி சுந்தரம் கூறுகையில், தமிழ்ச் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ள மாணவர்கள் நிலை குறித்து, சங்கம் சார்பில், கர்நாடகா தேர்வு ஆணையத்திடம் விளக்கம் கேட்டு, அவர்கள் முடிவுக்கு பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பாதிக்கப்பட்ட மாணவி மீனாட்சி கூறுகையில், தமிழகத்திலிருந்து இங்கு வந்து படிக்கும் நாங்கள், இதுவரை இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்தோம். முதலாண்டு தேர்வில், 90 சதவீதம் எடுத்துள்ளேன். இந்த ஆண்டு நல்ல முறையில் தேர்வு எழுதியும், பெயிலானது அதிர்ச்சியை அளித்துள்ளது என்றார்.  இவ்விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டு முடிவு காண வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us