தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆங்கிலம் பேச டாடா ஸ்கை பயிற்சி!

ஆங்கிலம் பேச டாடா ஸ்கை பயிற்சி!

ஆங்கிலம் பேச டாடா ஸ்கை பயிற்சி!


UPDATED : டிச 27, 2009 12:00 AM

ADDED : டிச 27, 2009 06:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 27, 2009 12:00 AM ADDED : டிச 27, 2009 06:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குடும்ப தலைவிகள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வீட்டில் உள்ள அன்றாட வேலைகளை பார்க்கின்றனர். நேரம் கிடைக்கும் போது "டிவி&' சீரியல்களை பார்ப்பதோடு அவர்கள் பொழுது கழிந்து விடுகிறது.ஆங்கில வழி கல்வியில் பயிலும் தங்கள் பிள்ளைகளுடன், அளவளாவ முடியவில்லையே என்ற ஏக்கத்தோடு இருந்து வந்தனர்.

ஆங்கில உரையாடல் பயிற்சி பெறவேண்டும் என்ற பல பெண்களின் கோரிக்கையை அறிந்த டாடா ஸ்கை நிறுவனம், பிரிட்டிஷ் கவுன்சிலுடன் சேர்ந்து, புது சேனல் ஒன்றை துவக்கியுள்ளது. அன்றாட நிகழ்வுகளை எளிய ஆங்கிலத்தில் சொல்ல, குடும்பத் தலைவிகளுக்கு, இந்த சேனல் கற்று கொடுக்கிறது.

இந்த 24 மணி நேரம் இயங்கும் சேனலில் குடும்ப தலைவிகள் தங்களுக்கு நேரம் வாய்க்கும் போது ஆங்கில உரையாடல் பயிற்சியை கற்றுக் கொள்ளலாம். இதற்காக கட்டணமாக மாதம் ஒன்றுக்கு 30 ரூபாய் செலுத்த வேண்டும்.இத்திட்டம் குறித்து, டாடா ஸ்கை நிறுவனத்தின் வர்த்தக அதிகாரி விக்ரம் மேக்ரா கூறியதாவது:பொறுப்புகளை கவனிப்பதிலே, குடும்பப் பெண்களுக்கு நேரம் சரியாகி விடுகிறது.

ஆங்கிலம் கற்க அவர்கள், பயிற்சி மையங்களுக்கு அலைய நேரம் கிடைப்பதில்லை.ஆங்கிலம் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தால் நிறைய பெண்கள் எங்களுக்கு கோரிக்கை வைத்தனர். அதனால், இந்த திட்டத்தை துவக்கி இருக்கிறோம். தினமும் 24 மணி நேரம் பயிற்சி அளிக்க திட்டமிட்டு இருக்கிறோம்.இவ்வாறு விக்ரம் மேக்ரா கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us