தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அண்ணா பல்கலை முன்னாள் மாணவர்களின் மலரும் நினைவுகள்

அண்ணா பல்கலை முன்னாள் மாணவர்களின் மலரும் நினைவுகள்

அண்ணா பல்கலை முன்னாள் மாணவர்களின் மலரும் நினைவுகள்


UPDATED : டிச 28, 2009 12:00 AM

ADDED : டிச 28, 2009 10:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 28, 2009 12:00 AM ADDED : டிச 28, 2009 10:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அண்ணா பல்கலைக்கழக அலுமினி அசோசியேஷன் சார்பில், 1984ம் ஆண்டு பொறியியல் பட்டப் படிப்பு முடித்த மாணவர்களது ஒன்று கூடல் சந்திப்பு நிகழ்ச்சி, சென்னை அண்ணா பல்கலையில் நடந்தது. கடந்த 1984ம் ஆண்டு, பி.இ., பொறியியல் படிப்பு ஐந்து ஆண்டுகளிலிருந்து நான்கு ஆண்டுகளாக மாற்றப்பட்டது. இந்த கால கட்டத்தில், இப்பல்கலையில், இந்திய மாணவர்கள், வெளிநாட்டவர் உட்பட 296 பேர் பொறியியல் படிப்பு படித்து வந்தனர்.இவர்கள், தாங்கள் படித்து 25 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு அண்ணா பல்கலையில், வெள்ளி விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இந் நிழ்ச்சியில், எத்தியோபியா நாட்டின் கல்வித்துறை அமைச்சர் வோண்டுவோசன் கிப்லு உட்பட முன்னாள் மாணவர்கள் 152க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர்கள் மட்டுமில்லாது, இந்த மாணவர்களுக்கு பாடம் நடத்திய முன்னாள் பேராசிரியர்கள், 35 பேரும் பங்கேற்றனர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 25 வருடங்களுக்குப் பிறகு, சந்தித்து தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

 இந்நிகழ்ச்சியின் அடையாளமாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய குழு புகைப் படமும் எடுத்துக் கொண்டனர்.நிகழ்ச்சியைத் துவக்கி வைத்து, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவகர் பேசுகையில், நீங்கள் படித்த போது அண்ணா பல்கலையில், பெண்கள் படிப்பு சதவீதம் அதிகம் கிடையாது. அப்போது 4,000 பேர் மட்டுமே படித்தனர். தற்போது 11 ஆயிரம் பேர் படிக்கின்றனர். பெண்கள் படிப்பு சதவீதமும் உயர்ந்துள்ளது என்றார்.

அண்ணா பல்கலையின் முன்னாள் மாணவரும், எத்தியோபியா நாட்டின் கல்வி அமைச்சருமான வோண்டுவோசன் கிப்லு பேசுகையில், எத்தியோப்பியாவில் உள்ள பேராசிரியர்களுக்கு, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களைக் கொண்டு, பயிற்சியளிக்க திட்டமிட்டுள்ளோம். 25 ஆண்டுகளுக்கு பிறகு எனது நண்பர்களை சந்தித்தது நெகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

நிகழ்ச்சியில், அண்ணா பல்கலையில் படித்து, தற்போது அமெரிக்கா, எத்தியோபியா, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us