UPDATED : டிச 29, 2009 12:00 AM
ADDED : டிச 29, 2009 03:33 PM
ஊழியர்களுக்கான தேவை குறைந்து உற்பத்திச் செலவைக் குறைப்பதற்கான தேவை அதிகரித்ததை நாம் பார்த்து வந்திருக்கிறோம். அனுபவம் உள்ளவர்களுக்கான தேவை மட்டும் சற்றே திருப்தியாக காணப்பட்டது. ஆனாலும் கடந்த சில வாரங்களாக இதில் பெரும் மாற்றம் காணப்படுகிறது. மீண்டும் பொருளாதார எழுச்சி காணப்படுவதால் புதியவர்கள் மற்றும் அனுபவம் பெற்றவருக்கான தேவை அதிகரிக்கத் துவங்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் பொருளாதார எழுச்சியானது நம் நிறுவனங்களை மகிழ்ச்சியுறச் செய்துள்ளன. முதலீடு அதிகரிக்கத் துவங்கியுள்ளது. வரும் ஆண்டில் இன்சூரன்ஸ் துறையில் புதிய பணி வாய்ப்புகள் ஏராளமாக உருவாக உள்ளன. மேலும் ஆட்டோ, டெலிகாம் போன்ற துறைகளிலும் வேலை வாய்ப்புகள் ஏராளமாக உருவாகவுள்ளன. இந்தியாவின் 4 மெட்ரோ நகரங்களிலும் புனேயிலும் புதிய வாய்ப்புகள் அதிகம் உருவாகும் என்று வேலை ஆலோசகர்கள் கூறுகின்றனர். இந்தியா தான் சமீபத்திய சர்வே ஒன்றில் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட்ட 35 நாடுகளில் புதிய வேலைகளுக்கான வாய்ப்புகள் உள்ள முதன்மையான நாடாக அறியப்படுகிறது. இதனால் 2010ம் ஆண்டு என்பது இளைஞர்களுக்கு புதிய வேலைகள் குறித்த எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
