தமிழ் செம்மொழி மாநாடு: ஆலோசனை குழு உறுப்பினர்கள் நியமனம்
தமிழ் செம்மொழி மாநாடு: ஆலோசனை குழு உறுப்பினர்கள் நியமனம்
UPDATED : ஜன 08, 2010 12:00 AM
ADDED : ஜன 08, 2010 01:54 PM
இது குறித்து, தமிழக அரசு கூறியிருப்பதாவது: இலங்கை பேராசிரியர் சிவத்தம்பி தலைமையில், ஏற்கனவே ஆய்வரங்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவ்வை நடராசன், பொற்கோ ஆகியோர் இணைத் தலைவர்களாகவும், செயலராக கனிமொழியும், ஒருங்கிணைப்பாளராக தமிழ்ப் பல்கலைக் கழக துணைவேந்தர் ராஜேந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆய்வரங்க பணிகளை திட்டமிடவும், வரப்பெறும் ஆய்வுக் கட்டுரைகளுக்கு ஏற்ப அமர்வுகளை வரையறை செய்யவும், ஆய்வரங்க அமைப்புக் குழுவிற்கு ஆலோசனைக் குழு உறுப்பினர்களையும், ஆய்வரங்க குழு உறுப்பினர்களையும் நியமித்து, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
ஆலோசனைக் குழு உறுப்பினர்கள்: ஜார்ஜ் எல் ஹார்ட் (அமெரிக்கா), மீனாட்சி சுந்தரம், எழுத்தாளர் ஜெயகாந்தன், ஆஷர் (யூ.கே), அலெக்சாண்டர் டுபியன்ஸ்கி (ரஷ்யா), தாமஸ் மால்டன் (ஜெர்மனி), வாசெக் (செக்கோஸ்லோவியா), டத்தோ மாரிமுத்து (மலேசியா), லேமன் (ஜெர்மனி), நாராயணசாமி திருமலைச்செட்டி (மொரீஷியஸ்), திண்ணப்பன் (சிங்கப்பூர்), ஹெல்மன் ராசநாயகம் (ஜெர்மனி), ரவிக்குமார் (எம்.எல்.ஏ.,) ஆகிய 13 பேர், ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆய்வரங்கக் குழு உறுப்பினர்கள்: தமிழண்ணல், வேழவேந்தன், முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன், தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, சுந்தரமூர்த்தி, மணவாளன், கந்தசாமி, சம்பகலட்சுமி, சுப்பராயலு, முத்துக்குமாரசாமி, சிற்பி பாலசுப்பிரமணியம், ஜான் சாமுவேல், நெடுஞ்செழியன், மறைமலை, ராமசாமி, குணசேகரன், அரசு, தெய்வசுந்தரம், ஜெயதேவன், ரவிச்சந்திரன், வேங்கடாசலபதி, மோகன் ஆகிய 22 பேர், ஆய்வரங்கக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
